எந்த அணியிலும் 11 புஜாரா மற்றும் 11 பண்ட் இருக்கமாட்டார்கள் – இந்திய அணியின் பேட்டிங் கோச் பேட்டி

Rathour

கடந்த சில ஆண்டுகளாகவே டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது இந்திய அணி. மிடில் ஆர்டரில் களமிறங்கி தன்னுடைய அதிரடி ஆட்டத்தினால் ஒட்டுமொத்த போட்டியையும் திசைதிருப்பும் வீரராக ரிஷப் பன்ட் இந்திய அணியில் இருக்கிறார். அதே வேளையில் மறுமுனையில் தன்னுடைய விக்கெட்டை இழந்து விடாமல் இருக்க பொறுமையாக விளையாடும் புஜாராவும் அணிக்குள் இருக்கிறார். இப்படி பலவிதமான மனநிலமையை கொண்ட இந்திய வீரர்களுக்கு பேட்டிங் பயிற்சி அளிப்பது என்பது சற்று கடினமான விடயம்தான். ஆனால் இதனை கச்சிதமாக செய்து வருகிறார் இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இருக்கும் விக்ரம் ரத்தோர்.

அவர் அளித்த பேட்டியில் இந்திய வீரர்கள் அனைவரும் வெவ்வேறான மனநிலமை உடையவர்கள் என்றும், அவர்களுக்கு எப்படி தன்னால் சிறந்த முறையில் பேட்டிங் பயிற்சி அளிக்க முடிகிறது என்றும் கூறியிருக்கிறார். இதுபற்றி பேசிய அவர், புஜாரா மற்றும் ரிஷப் பன்ட்டை எடுத்துக் கொள்ளுங்கள், இருவரும் வெவ்வேறு விதமான மனநிலமை மற்றும் ஆட்டத்திறனை உடையவர்கள். அவர்களிடம் அவர்கள் எப்படி விளையாட நினைக்கிறார்கள் என்பது கேட்பதுதான் அவர்களின் எண்ணங்களை தெரிந்துகொள்வதற்கான ஒரே வழியாக இருக்கும். இதனை சரியாக புரிந்துகொண்டால்தான் பேட்டிங்கின் போது அவர்கள் செய்யும் தவறுகளை நம்மால் திருத்த முடியும் என்று அவர் கூறினார்.

- Advertisement -

மனநிலமையில் ஒவ்வொரு வீரரும் மாறுபட்டிருந்தாலும் அவர்களுடைய குறிக்கோளாக ரன்களை சேர்ப்பது மட்டுமே இருக்கிறது. இதனை குறிப்பிட்டு பேசிய அவர், எந்த ஒரு அணியிலும் புஜாராவைப் போன்றே பதினோரு வீரர்களும் அல்லது ரிஷப் பன்ட்டை போன்றே பதினோரு வீரர்களும் இருந்து விட மாட்டார்கள். இரு மாறுபட்ட மனநிலமையை கொண்டிருக்கும் இருவர் இணைந்துதான் வெற்றியை தேடிதர முடியும்.

pujara

எனவே ஒரு பயிற்சியாளராக அவர்கள் களத்திற்கு உள்ளேயும், களத்திற்கு வெளியேயும் என்ன செய்ய நினைக்கிறார்களோ அதனை அனுமதிக்க வேண்டும். மேலும் சூழ்நிலைக்கு ஏற்றார்போல் ரிஷப் பன்ட் புஜாராவைப் போல் ஆட வேண்டும். இதே போல புஜாராவும் பன்ட்டைப்போல் ஆட வேண்டும் என்றும் அவர் அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

Rathour

2014ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணிக்கு பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட சஞ்சய் பங்காரின் நியமனக்காலம் 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முடிவு பெற்றது. அவருக்கு மீண்டும் அந்த பதிவியை தர விரும்பாத இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம், 2019ஆம் ஆண்டு விக்ரம் ரத்தோரை புதிய பேட்டிங் பயிற்சியாளராக நியமித்தது. இவர் பதிவியேற்ற பின் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றியிருக்கிறது என்பதுடன், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கும் இந்திய அணி தகுதி பெற்றிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement