இனிமே தான் இவரோட ஆட்டமே இருக்கு. அடிச்சி நொறுக்கப்போறாரு பாருங்க – சீனியர் வீரரை புகழ்ந்த விக்ரம் ரத்தோர்

Rathour

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி வருகிற ஜூன் மாதம் 18ஆம் தேதி முதல் 22-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை கைப்பற்றும் என்பதனால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. ஏற்கனவே இந்த தொடருக்கான இந்திய அணி இங்கிலாந்து சென்றுள்ள நிலையில் நியூசிலாந்து அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

INDvsNZ

இந்நிலையில் இந்த உலக டெஸ்ட் தொடரின் இறுதிப் போட்டி குறித்து பல்வேறு முன்னாள் வீரர்கள், நிபுணர்கள், கிரிக்கெட் விமர்சகர்கள், பிரபலங்கள் என பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் இறுதிப் போட்டியில் விளையாடும் சில வீரர்களும் தங்களது கருத்துக்களை சமூக வலைதளம் மூலமாக வெளியிட்டு வருகின்றனர்.

- Advertisement -

அந்த வகையில் தற்போது இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இருக்கும் விக்ரம் ரத்தோர் இந்த இறுதிப் போட்டியில் ரோகித் சர்மா நிச்சயம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : ரோகித் சர்மாவின் பேட்டிங்கில் இப்போது ஒரு கட்டுப்பாடு இருக்கிறது. அவருடைய மனநிலையிலும் மாற்றம் இருக்கிறது இதனால் அவர் நிச்சயம் டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்.

rohith 1

அவரது சிறப்பான டெஸ்ட் இன்னிங்ஸ் இனிதான் நீங்கள் பார்க்க போகிறீர்கள் என்று அவர் கூறியுள்ளார். மேலும் அவர் தொடர்ந்து கூறுகையில் : அண்மைக்காலங்களாக டெஸ்ட் கிரிக்கெட்டில் ரோகித் சர்மா சிறப்பாக விளையாடி வருகிறார். அவருடைய ஒருநாள் டி20 ரெக்கார்டுகளை போன்றே டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதனை படைக்க வேண்டும் என்ற ஆசை அவரிடம் உள்ளது. எனவே இனிவரும் போட்டிகளில் நிதானமாக விளையாடி பெரிய ஸ்கோரை எட்ட முயற்சி செய்வார்.

- Advertisement -

Rohith

டி20 ஒருநாள் போட்டிகளில் எவ்வாறு நிதானமாக விளையாடி பெரிய ஸ்கோர் அடிக்கிறாரோ அதே போன்று டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் பெரிய ஸ்கோர் நிச்சயம் அடிப்பார். இனிமேல்தான் டெஸ்டில் அவருடைய பெஸ்ட் இன்னிங்ஸை நீங்கள் பார்க்க இருக்கின்றீர்கள் என விக்ரம் ரத்தோர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement