இவர் எவ்ளோ மோசமாக விளையாடினாலும் அணி நிர்வாகம் இவருக்கு சப்போர்ட் பண்ணும் – பேட்டிங் கோச் பேட்டி

Rathour

கொரோனா வைரஸ் ஏற்படுத்திய பாதிப்பு காரணமாக கடந்த 4 மாதங்களாக சர்வதேச அளவில் எந்தவொரு கிரிக்கெட் தொடரும் நடைபெறவில்லை. இதனால் ஏற்பட்ட ஓய்வு நேரத்தில் முன்னாள் வீரர்கள் மட்டுமின்றி தற்போது விளையாடும் வீரர்களும் வீட்டில் இருந்தபடியே சமூகவலைத்தளம் மூலமாக ரசிகர்களுடன் உரையாடுவது மட்டுமின்றி தங்களது அனுபவங்களையும் பகிர்ந்து வருகின்றனர்.

Rathour

அந்தவகையில் தற்போது இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இருக்கும் விக்ரம் ரத்தோர் இந்திய அணியில் ஸ்பெஷலான ஒரு வீரர் இருப்பதாகவும் அவரை இந்திய அணி நிர்வாகம் தக்கவைத்து வருகிறது. விரைவில் அவர் மிகப்பெரிய திருப்பத்தை இந்திய அணிக்கு ஏற்படுத்துவார் என்று தனது கருத்தினை அளித்துள்ளார். அவர் கூறிய அந்த வீரர் வேறுயாருமில்லை தோனிக்கு பதிலாக இந்திய அணியில் விக்கெட் கீப்பராக இடம் பிடித்த இளம் அதிரடி ஆட்டக்காரர் பண்ட் தான்.

இதுகுறித்து விக்ரம் ரதோர் கூறுகையில் ‘‘ரிஷப் பண்ட்-க்கு கடந்த வருடம் சிறப்பாக அமையவில்லை. சர்வதேச போட்டியிலும் சிறப்பாக விளையாடவில்லை. அணி நிர்வாகம் இன்னும் அவருக்கு ஆதரவாக இருக்கிறது. அவர் சிறப்பான வீரர் என்பதை நாங்கள் நம்புகிறோம். அவர் ரன்கள் அடிக்க தொடங்கிவிட்டால் இந்திய அணிக்கு மிகப்பெரிய அளவில் உதவியாக இருப்பார்.

Pant 1

இன்னும் எம்எஸ் டோனி இந்திய அணிக்காக விளையாடும் நோக்கில்தான் உள்ளார். அவரது எதிர்காலம் குறித்து என்ன நடக்கும் என்பது எங்களுக்குத் தெரியாது. அவரது இடத்தை நிரப்புவது எளிதான காரியம் அல்ல. ரிஷப் பண்ட் சில போட்டிகளில் சொதப்பியதால் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளார். ஆனால், இதுபோன்ற சில விஷயங்கள் வலிமையாகவும், சிறந்த வீரராகவும் உருவாக்கும்’’ என்றார்.

- Advertisement -

ஆனால் தோனிக்கு பதிலாக இந்திய அணியில் இடம்பிடித்த பண்ட் ஆரம்பத்தில் சிறப்பாக விளையாடி இருந்தாலும் சமீப காலமாக அவர் தொடர்ந்து படு மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதன் காரணமாக தற்போது ஒரு நாள் அணிக்கு ராகுல் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆக செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் தற்போது தனது பார்ம் இன்றி தவித்தாலும் விரைவில் அவர் சிறப்பாக திறம்பட செயல் படுவார் என்று அனைவரும் எதிர்பார்த்து காத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

Pant 1

ரிஷப் பண்ட் இதுவரை இந்திய அணிக்காக 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 814 ரன்களும், 16 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 374 ரன்களும், 28 டி20 போட்டிகளில் விளையாடி 410 ரன்களையும் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.