கோலியின் மிகப்பெரிய பலமே இதுதான். அதனால் தான் கோலியால் இப்படி விளையாட முடிகிறது – பேட்டிங் பயிற்சியாளர் பேட்டி

Rathour

இந்திய அணியின் கேப்டனாக விராட் கோலி கடந்த 2014-ஆம் ஆண்டிலிருந்து செயல்பட்டு வருகிறார். தொடர்ச்சியாக ஒருநாள், டி20, டெஸ்ட் என அனைத்து போட்டிகளிலும் கேப்டனாக மட்டுமின்றி பேட்ஸ்மேனாகவும் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இதன் காரணமாகத்தான் தற்போது அவர் உலகின் மிகச் சிறந்த பேட்ஸ்மேனாக திகழ்ந்து வருகிறார்.

Kohli

இதற்கு அவரது அர்ப்பணிப்பு, திறன் ,தனது உடலை பராமரிக்கும் எண்ணம் ஆகிய பலவற்றைக் காரணமாகக் கூறலாம். இந்நிலையில் அதற்கு காரணம் என்னவென்று இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரதோர் பேசியுள்ளார். அவர் கூறுகையில்…

அவரது அர்ப்பணிப்பு எனக்கு வியப்பாக இருக்கிறது. எப்போதும் உலகத்திலேயே மிகச்சிறந்த வீரராக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார். அதற்காக கடுமையாக உழைத்து வருகிறார். அவரைப் போல இந்த அளவிற்கு கடினமாக உழைக்கும் கிரிக்கெட் வீரரை நான் இதுவரை கண்டதில்லை. அவரது மிகப்பெரிய பலம் என்னவென்றால் சூழலுக்கு ஏற்றாற்போல் தன்னை எப்போதும் தகவமைத்துக் கொண்டே இருப்பார்.

Kohli

இப்படி இருப்பவர்களால் மட்டுமே மூன்று விதமான போட்டிகளிலும் சரியான முறையில் விளையாட முடியும் . ஒருநாள், டி20, டெஸ்ட் என அனைத்துப் போட்டிகளுக்கும் தன்னை மாற்றிக்கொண்டே இருக்கும் திறன் அவரிடம் இருக்கிறது. இதுதான் அவரது மிகப்பெரிய பலம். 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் 4 சதங்களை அடித்தார் .

- Advertisement -

மேலும் 40 சிக்சர்கள் அடித்து இருந்தார். ஐபிஎல் தொடர் முடிந்து உடனடியாக நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஒரு பந்தை கூட சிக்சருக்கு அடிக்காமல் இரட்டை சதம் விளாசினார். அந்த அளவிற்கு அவரது திறமையை தகவமைத்துத்துக்கொள்கிறார் இதனை பார்த்து நான் வியந்து போனேன் என்று கூறியுள்ளார் விக்ரம் ரத்தோர்.

Kohli-2

இப்படி தொடர்ச்சியாக பேட்ஸ்மேனாகவும், கேப்டனாகவும் சிறப்பாக செயல்பட்டு வரும் கோலிக்கு ஐ.சி.சி கோப்பையை தனது தலைமையில் கைப்பற்றாதது மட்டுமே ஒரே ஒரு குறையாக இன்றளவும் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.