ரோஹித் சர்மாவுடன் ஏற்பட்ட விரிசலால் சுப்மன் கில் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பபடுகிறாரா? பேட்டிங் கோச் பதில்

Vikram Rathour
- Advertisement -

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பை தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இந்த வருடம் முதல் போட்டியிலேயே அயர்லாந்தை எளிதாக தோற்கடித்த இந்தியா இரண்டாவது போட்டியில் பரம எதிரி பாகிஸ்தானை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அதைத் தொடர்ந்து அமெரிக்காவையும் வீழ்த்திய இந்திய அணி கனடாவுக்கு எதிராக விளையாடவிருந்த 4வது போட்டி மழையால் ரத்தானது.

இதைத் தொடர்ந்து ஜூன் 20ஆம் தேதி இந்தியா தங்களுடைய முதல் சூப்பர் 8 போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை சந்திக்கிறது. அதற்காக அமெரிக்காவிலிருந்து வெஸ்ட் இண்டீஸ் பயணித்துள்ள இந்திய அணையிலிருந்து சுப்மன் கில் மற்றும் ஆவேஷ் கான் ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்த உலகக் கோப்பைகாக ரிங்கு சிங், சுப்மன் கில், ஆவேஸ் கான், கலீல் அகமது ஆகியோர் ரிசர்வ் வீரர்களாக தேர்வு செய்யப்பட்டிருந்தனர்.

- Advertisement -

உண்மை என்ன:
குறிப்பாக ஏதேனும் வீரருக்கு காயம் ஏற்பட்டால் உடனடியாக இந்த வீரர்களை தேர்ந்தெடுத்து நிலைமையை சமாளிப்பதற்காக அந்த நால்வரும் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். அதன் காரணமாக அமெரிக்கா சென்ற இந்த 4 வீரர்களும் இந்தியா விளையாடிய போட்டிகளை மைதானத்திலிருந்து பார்த்தனர். ஆனால் அதில் சுப்மன் கில் மட்டும் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியை மைதானத்திலிருந்து நேராக பார்க்கவில்லை.

மாறாக அவர் அமெரிக்காவை சுற்றிப் பார்க்க சென்றதாக செய்திகள் வெளியானது. அந்த வகையில் அமெரிக்காவில் தன்னுடைய சொந்த செயல்களில் ஈடுபட்ட சுப்மன் கில் இந்திய அணியுடன் இணைந்து வலைப்பயிற்சியில் ஈடுபடுவதற்கும் ஆர்வம் காட்டவில்லை என்று தெரிந்தது. இது போக தமக்கு உலகக் கோப்பையில் வாய்ப்பு கொடுக்காததால் இன்ஸ்டாகிராமில் கேப்டன் ரோஹித் சர்மாவை பின்தொடர்வதை சுப்மன் கில் நிறுத்தி விட்டதாக ரசிகர்கள் கண்டறிந்தனர்.

- Advertisement -

அப்படி நன்னடத்தையை பின்பற்றாததாலும் ரோகித் சர்மாவுடன் ஏற்பட்ட விரிசல் காரணமாகவும் சுப்மன் கில் இந்திய அணியிலிருந்து கழற்றி விடப்பட்டதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. ஆனால் அதை மறுத்துள்ள இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் உண்மையான காரணத்தை பற்றி பேசியது பின்வருமாறு. “இது எங்களுடைய ஆரம்பகட்ட திட்டமாகும்”

இதையும் படிங்க: இங்கிலாந்துக்காக ஜெயிக்கல.. ஸ்காட்லாந்தை மதிக்கிறோம்.. ஆஸ்திரேலியாவின் வெற்றி இது தான் காரணம்.. மார்ஷ் பேட்டி

“அமெரிக்காவுக்கு வந்த போது எங்களுடன் 4 ரிசர்வ் வீரர்கள் இருந்தனர். அங்கு போட்டிகள் முடிந்ததும் இருவரை விடுவிப்பது என்றும் இருவர் மட்டும் எங்களுடன் வெஸ்ட் இண்டீஸ் வருவதும் என்றும் ஏற்கனவே நாங்கள் தீர்மானித்தோம். எனவே அணி தேர்வான போதே இந்த திட்டம் வகுக்கப்பட்டது. அதை நாங்கள் தற்போது பின்பற்றுகிறோம். அவ்வளவு தான்” என்று கூறினார்.

Advertisement