- Advertisement -
இந்திய கிரிக்கெட்

அந்த 2 ஜாம்பவான்கள் மாதிரி.. சுப்மன் கில் ஆட்டத்தை இனிமேல் தான் பார்ப்பீங்க.. விக்ரம் ரத்தோர் வரவேற்பு

இந்திய டி20 கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக சூரியகுமார் யாதவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். குறிப்பாக 2022 டி20 உலகக் கோப்பையில் ஹர்திக் பாண்டியா துணை கேப்டனாக செயல்பட்டார். அதனால் ரோஹித் சர்மாவின் ஓய்வுக்கு பின் அவர் புதிய கேப்டனாக அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் புதிய பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ள கௌதம் கம்பீர் அவரை கழற்றி விட்டு சூரியகுமாரை கேப்டனாக தேர்ந்தெடுத்துள்ளார்.

அதை விட சுப்மன் கில்லை புதிய துணை கேப்டனாக அவர் தேர்ந்தெடுத்துள்ளது பல ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் டி20 கிரிக்கெட்டில் கொஞ்சம் குறைவான ஸ்டிரைக் ரேட்டில் விளையாடுவதை வழக்கமாக வைத்துள்ள அவர் சமீபத்திய ஜிம்பாப்வே தொடரில் நடந்து கொண்டதாக ரசிகர்கள் ஆதாரத்துடன் விமர்சித்தனர். ஆனால் அவரை துணைக் கேப்டனாக தேர்ந்தெடுத்துள்ள தேர்வுக்குழு ருதுராஜ், அபிஷேக் ஆகியோரை கழற்றி விட்டுள்ளது

- Advertisement -

ஆட்டமே இனிமேல் தான்:
இந்நிலையில் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் கேப்டனாக பொறுப்பேற்ற பின்பு தான் இன்னும் அபாரமாக செயல்பட்டதாக இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் தெரிவித்துள்ளார். அது போல சுப்மன் கில் இனிமேல் தான் இன்னும் அபாரமாக செயல்படுவார் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அதை விட சுப்மன் கில் வருங்காலத்தில் 3 வகையான இந்திய அணியின் கேப்டனாக செயல்படுவார் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

“குஜராத் டைட்டன்ஸ் அல்லது ஜிம்பாப்வே தொடரில் அவர் கேப்டனாக நல்ல வேலையை செய்துள்ளார். அவர் நல்ல பாடி லாங்குவேஜை காண்பித்துள்ளார். ஒரு அணியை நீங்கள் வழி நடத்துவதற்கு அது தான் மிகவும் முக்கியம். தற்போது துணை கேப்டன்ஷிப் பதவியை கொடுத்ததன் வாயிலாக பிசிசிஐ அவருக்கு எக்ஸ்ட்ரா பொறுப்பை கொடுத்துள்ளது”

- Advertisement -

“இந்த வேலையில் அவரும் அசத்துவார் என்று நான் உறுதியாக சொல்வேன். கேப்டன்ஷிப் பொறுப்பு தான் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோரிடம் இருந்து சிறந்த செயல்பாடுகளை கொண்டு வந்தது. அதே போல சுப்மன் கில்லும் அசத்துவார் என்று நான் கருதுகிறேன். இன்னும் கேப்டனாக நியமிக்கப் படாவிட்டாலும் தலைமை பொறுப்பில் இருப்பதே அவரிடமிருந்து சிறந்த செயல்பாடுகளை கொண்டு வரும்”

இதையும் படிங்க: பழிக்குபழி வேலையாகாது.. இந்தியாவை பகைச்சுகிட்ட அந்த 3 பேரும் வரமாட்டாங்க.. பாகிஸ்தானை எச்சரித்த முன்னாள் சேர்மேன்

“ஏனெனில் மற்ற வீரர்களை வழி நடத்தும் போது உங்களிடம் எக்ஸ்ட்ரா பொறுப்பு ஏற்படும். அது நல்லது. குறிப்பாக சுப்மன் கில் போன்ற இளம் வீரருக்கு அது சிறப்பானது. ஒருநாள் அவர் 3 வகையான அணியையும் கேப்டனாக வழி நடத்துவார்” என்று கூறினார். முன்னதாக 2024 ஐபிஎல் தொடரில் சுப்மன் கில் தலைமையில் குஜராத் லீக் சுற்றுடன் வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -