இந்திய அணியில் இனிமேல் ஒரு முழுநேர பேட்ஸ்மேனாக இவர் தொடர்ந்து விளையாடுவார் – பேட்டிங் கோச்

Vikram
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 3 ஒருநாள், 3 டி20 மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. ஆஸ்திரேலிய அணி இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று ஒருநாள் தொடரை கைப்பற்றியது. இதையடுத்து இந்திய அணி 2-1 என்ற கணக்கில் டி20 மற்றும் டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் இந்திய விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் 3 டெஸ்ட் போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் சாஹாவிற்கு பதிலாக அணியில் இடம் பெற்ற இவர் இந்த சுற்றுப்பயணத்தில் பல்வேறு சாதனைகளை படைத்திருக்கிறார்.

pant

- Advertisement -

ரிஷப் பண்ட் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாட ஆறு இன்னிங்சில் 29,0*, 36,97, 23, 89 ரன்கள் குவித்த இந்திய அணி வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்தார். இதன் மூலம் குறைந்த இன்னிங்சில் 1000 ரன்களை கடந்த விக்கெட் கீப்பர் என்ற சாதனையையும் படைத்திருக்கிறார் பண்ட். இந்நிலையில் ரிஷப் பண்ட் பேட்டிங்கில் சிறப்பாக விளையாடி இருந்தாலும் கீப்பிங்கில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பல கேட்ச்சுகளை தவற விட்டதன் காரணமாக பண்ட் விமர்சனத்திற்கு உள்ளானார். இந்நிலையில், இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளரான விக்ரம் ரத்தோர் : ரிஷப் பண்ட் இனிமேல் முழுநேர பேட்ஸ்மேனாக ஆகவே செயல்பட வாய்ப்பு இருப்பதாக குறிப்பிட்டிருக்கிறார். செய்தியாளர்கள் சந்திப்பில் இது தொடர்பாக பேசிய விக்ரம் ரத்தோர் “ எதிர்காலத்தில் ரிஷப் பண்ட்டின் பங்கு இந்திய அணிக்கு கண்டிப்பாக தேவைப்படும் என்று நினைக்கிறேன்.

Pant

இவரை போன்ற வீரரை யாரும் மிஸ் செய்ய விரும்ப மாட்டார்கள். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சிறப்பாக விளையாடி இருக்கிறார். இனிவரும் காலங்களில் ஒரு மேட்ச் வின்னர் இருப்பார். சிட்னி மற்றும் பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டிகளில் இவரது ஆட்டத்தை நாம் கண்டிருப்போம். இவர் இடதுகை பேட்ஸ்மேனாக இருப்பது அணிக்கு இன்னும் பலம் சேர்க்கிறது.

pant

எனவே எதிர்காலத்தில் ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பராக இல்லையென்றாலும் முழுநேர பேட்ஸ்மனாக மட்டுமே களமிறக்க வாய்ப்பிருக்கிறது” என்று கூறி இருக்கிறார் விக்ரம் ரத்தோர். ஏற்கனவே ஒருநாள் மற்றும் டி20 அணியில் தனது இடத்தை இழந்த பண்ட் மீண்டும் அந்த அணிகளில் இடம்பிடிக்க வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது.

Advertisement