யார் இந்த விக்ரம் ரத்தோர். பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்க யார் சிபாரிசு செய்தது – தெரியுமா ?

Rathore
- Advertisement -

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி சில தினங்களுக்கு முன்னர் நியமிக்கப்பட்டார். அதனை தொடர்ந்து இந்திய அணி பேட்டிங், பவுலிங் மற்றும் பில்டிங் பயிற்சியாளர்களை தேர்வுக்குழு தலைவர் எம் எஸ் கே பிரசாத் தலைமையிலான தேர்வுக்குழு தேர்வு செய்யும் என்று அறிவிக்கப்பட்டது.

ravi

- Advertisement -

இந்நிலையில் கடந்த சில நாட்களாக இந்த தேர்வு குழு இதர பயிற்சியாளர்களுக்கான நேர்காணலை நடத்தியது. இதன் முடிவில் பந்துவீச்சு பயிற்சியாளராக பரத் அருணும், பீல்டிங் பயிற்சியாளராக ஸ்ரீதரும் தொடர்கிறார்கள். இதற்கு முன்பு பேட்டிங் பயிற்சியாளராக சஞ்சய் பாங்கர் இருந்தார். அவர் தற்போது மாற்றப்படுகிறார்.

பேட்டிங் பயிற்சியாளராக புதிதாக விக்ரம் ரத்தோரை தேர்வு செய்ய தேர்வு குழு பரிந்துரைத்துள்ளது. மேலும் அவர் பேட்டிங் பயிற்சியாளராவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது என்றே கூறலாம். விக்ரம் ரத்தோர் பஞ்சாப்பை சேர்ந்த வீரர் இந்திய அணிக்காக 7 ஒருநாள் போட்டியிலும் 6 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

சர்வதேச அளவில் சாதிக்கா விட்டாலும் முதல்தர கிரிக்கெட்டில் 146 ஆட்டங்களில் பங்கேற்று 33 சதம் மற்றும் 11463 ரன்கள் குவித்திருக்கிறார். இவரின் அனுபவம் பயிற்சி அளிக்க போதுமானது என்று தேர்வு குழுவின் தலைவர் எம் எஸ் கே பிரசாத் நம்புகிறார். எனவே அவரே இவரை பேட்டிங் பயிற்சியாளராக பரிந்துரைத்து தற்போது நியமிக்கப்பட உள்ளது.

Advertisement