பண்ட் பேட்டிங்கில் இதை மட்டும் கடைபிடிச்சா அவர்தான் டாப்கிளாஸ் – ஐடியா கொடுத்த பேட்டிங் பயிற்சியாளர்

Vikram
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி மழையின் காரணமாக ரத்தானது. அதன் பிறகு தற்போது இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 2வது டி20 போட்டி இன்று மொஹாலியில் நடைபெறவுள்ளது.

Pant

- Advertisement -

இந்நிலையில் இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் இந்த போட்டி குறித்து பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது : இந்திய அணி டி20 போட்டிகளில் தங்களது பேட்டிங் நடைமுறையை மாற்ற வேண்டும். குறிப்பாக துவக்கத்திலிருந்து அதிரடியாக ரன்களை குவித்து ஆடவேண்டும். அப்படி செய்தால் போட்டியை எளிதில் நாம் வெற்றி பெற முடியும்.

மேலும் என்னைப்பொறுத்தவரை பண்ட் திறமையான வீரர் அனைத்து வகையான ஷாட்களையும் ஆட அவர் முயற்சி செய்ய வேண்டும். அவருடைய ஆட்டத்திற்கான ஒரு திட்டத்தை நான் அவரிடம் கூறி உள்ளேன். அதன்படி அவர் கடைபிடித்தால் அவர் டாப் கிளாஸில் செயல்படுவார். அவர் போட்டியை அறிந்து பயமற்ற ஆட்டத்தை விளையாட வேண்டும் மாறாக பொறுப்பற்ற ஆட்டத்தை அவர் விளையாடக்கூடாது.

pant 1

மேலும் அவர் அவரால் அடிக்கக்கூடிய அனைத்து ஷாட்களையும் பயமின்றி விளையாடலாம் அதற்காக பொறுப்பற்ற தேவையில்லாத ஷாட்டுகளை அவர் ஆடக்கூடாது அதற்கான தீர்வுக்காக அவர் தற்போது பயிற்சியை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. விரைவில் அவரது ஆட்டம் மாறும் என்று பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement