தமிழ் நடிகர் விக்ரம் பிரபுவின் மகனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்த கோலி – காரணம் தெரிஞ்சா ஷாக் ஆய்டுவீங்க

Vikram-Prabhu
- Advertisement -

பிரபல தமிழ் நடிகரான விக்ரம் பிரபு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான பிரபுவின் மகன் ஆவார். இவர் தற்போது தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் விக்ரம் பிரபுவின் மகனுக்கு இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி வாழ்த்துக்கள் தெரிவித்த வீடியோ ஒன்றினை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

- Advertisement -

மேலும் அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து என் மகனுக்காக தனது நேரத்தை செலவு செய்து வீடியோ மெசேஜ் செய்த கோலிக்கு நன்றி எனவும், அதற்கான காரணத்தையும் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். அது யாதெனில் விக்ரம் பிரபுவின் மகனுக்கு நேற்றையதினம் பிறந்தநாள் என்பதால் அவருக்காக விராட் கோலி வீடியோ மெசேஜ் செய்துள்ளார். மேலும் அதற்கான முக்கியமான காரணம் :

விக்ரம் பிரபு கோலியின் தீவிர ரசிகர் ஆவார். எனவே அவரது மகனுக்கு விராட் என்று பெயர் சூட்டியுள்ளார். எனவே அவருக்கு ஸ்பெஷலாக அந்த மெசேஜை விராட்கோலி அனுப்பியுள்ளார் அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து விக்ரம்பிரபு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் கிடைத்த மகிழ்ச்சியை விட என் மகனுக்காக அவர் அனுப்பிய இந்த மெசேஜ் காக நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement