Vijay Shankar : பாகிஸ்தான் அணிக்கு எதிராக அறிமுகம் ஆனது சிறப்பானது – விஜய் ஷங்கர்

நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகிறது. இந்திய அணி இதுவரை தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகளை வீழ்த்தி மூன்று

shankar
- Advertisement -

நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகிறது. இந்திய அணி இதுவரை தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகளை வீழ்த்தி மூன்று வெற்றிகளையும், நியூசிலாந்துடனான மழையால் நின்ற போட்டியில் ஒரு டிரா என 7 புள்ளிகளில் உள்ளது.

india

- Advertisement -

இந்நிலையில் இந்திய அணியின் அடுத்த போட்டி இன்று 22ஆம் தேதி ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் விஜய் ஷங்கர் தனது உலகக்கோப்பை அறிமுக போட்டி குறித்து பேட்டி ஒன்றினை அளித்துள்ளார்.

அதில் விஜய் ஷங்கர் கூறியதாவது : உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக அறிமுகமானது ஸ்பெஷலான விஷயம். ஏனெனில் அந்த போட்டியில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியது என் நம்பிக்கையை அதிகரித்திருக்கிறது எனவே அந்த போட்டி எனக்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும். என்னைப் பொறுத்தவரை ஒவ்வொரு போட்டியில் நான் நன்றாக விளையாடுவதே எதிர்பார்க்கிறேன்.

Shankar 1

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நான் நிச்சயம் விளையாடுவேன். என்னுடைய காயம் தற்போது குணமடைந்து விட்டது. நேற்று நடந்த பிட்னஸ் தேர்வில் கூட நான் பங்கேற்றேன் அதனால் இன்றைய போட்டியில் நான் நிச்சயம் ஆடுவேன் என்று நம்பிக்கை தெரிவித்தார் விஜய் ஷங்கர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement