MS Dhoni : தோனியை அப்படியே பின்பற்றியதால் இன்று அணியில் இடம்பிடித்து இருக்கிறேன் – விஜய் ஷங்கர்

வரும் 30 ஆம் தேதி துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் உலககோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான அனைத்து

Shankar
- Advertisement -

வரும் 30 ஆம் தேதி துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் உலககோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான அனைத்து அணிகளும் தயாராக உள்ளன. இந்த தொடரில் மொத்தம் 48 போட்டிகள் நடைபெற உள்ளன.

Worldcup

இந்திய அணி உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க இங்கிலாந்து சென்றடைந்தது. கடந்த பல தொடர்களாக இந்திய அணி மிகச்சிறந்த பார்மில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் உலகக்கோப்பை தொடரின் இந்தியா அணியின் வீரர்கள் இப்போதே தொடரை எதிர்கொள்ள தயாராகிவிட்டார்கள். இந்திய அணி தற்போது பயிற்சி போட்டிகளில் விளையாடி வருகிறது.

- Advertisement -

இந்நிலையில் உலகக்கோப்பை இந்திய அணியில் விஜய் சங்கர் தேர்வானது குறித்து முதன் முறையாக பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : நான் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மெல்போர்ன் போட்டியில் அறிமுகமானேன். ஆனால் அந்த போட்டியில் என்னை பலருக்கு அடையாளம் தெரியவில்லை.

பிறகு இலங்கையில் நடந்த நிதாஸ்கோப்பை தொடரின் மூலம் எனது அறிமுகம் ரசிகர்களிடையே அறியப்பட்டது. அந்த தொடரில் இருந்து சிறப்பாக ஆடி வருகிறேன் மேலும் தோனியை போன்று எப்போதும் ஆட்டத்தின் இடையே பொறுமையாகவும், ஆட்டத்தை கூர்ந்து கவனிக்கவும் ஆரம்பித்தேன். இதனால் என்னால சிறப்பாக விரிவாக முடிகிறது மேலும் பொறுமையும் போட்டியை பற்றிய கவனமும் அதிகமிருப்பதால் அதனை என் பலமாக வைத்து அணியில் தேர்வாகி உள்ளேன் என்று விஜய் சங்கர் கூறினார்.

Advertisement