இந்திய அணியில் மீண்டும் இடம்பிடிக்க வித்தியாசமான முடிவை கையில் எடுத்த விஜய் ஷங்கர் – ஏன் இப்படிலாம் யோசிக்குறாரு

Shankar

இந்திய கிரிக்கெட் அணியில் தற்போது ஆடிக்கொண்டிருக்கும் ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியாவிற்கு தொடர்ந்து காயங்கள் ஏற்படுவதால், அவர் பந்து வீசவே சிரமப்பட்டு வருகிறார். ஹர்திக் பாண்டியாவால் பந்து வீச முடியாமல் இருப்பது, இந்திய அணிக்கு பெரும் இழப்பாக இருந்து வருகிறது. மேலும் அவரை ஒரு பேட்ஸ்மேனாக மட்டுமே அணியில் சேர்க்க இந்திய தேர்வுக் குழுவும் விரும்பவில்லை. எனவே அவருக்கு பதிலாக இன்னொரு வேகப்பந்து வீச்சாளர் ஆல்ரவுண்டரை தேடும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது இந்திய தேர்வுக் குழு. இந்த சந்தர்பத்தை பயன்படுத்திக்கொண்டு மீண்டும் இந்திய அணியில் இடம்பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார் தமிழக கிரிக்கெட் வீரர் விஜய் ஷங்கர்.

Vijay Shankar

கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு நாள் உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில், பேட்டிங், பீல்டிங் மற்றும் பௌலிங் என மூன்று விதமான திறமையையும் கொண்ட தமிழக வீரரான விஜய் சங்கர் ஆல்ரவுண்டரக தேர்வு செய்யப்பட்டார். ஆனால் அந்த உலகக் கோப்பை தொடரில் அவர் சரியாக விளையாடவில்லை. அதற்குப் பிறகு காயத்தினால் இந்திய அணியிலிருந்து வெளியேறிய அவருக்கு, மீண்டும் அணியில் இடம் கொடுக்கப்படவில்லை. தற்போது இந்திய அணி ஒரு ஆல்ரவுண்டரை தேடும் முயற்சியில் இருப்பதை உணர்ந்துள்ள அவர், அந்த இடத்திற்கு நான் தகுதியானவன் என்பதை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேட்டியளித்துள்ள அவர்,

- Advertisement -

நான் இந்திய அணியில் விளையாடியபோது, எனக்கு எப்போதெல்லாம் பேட்டிங் விளையாட வாய்ப்பு கிடைத்ததோ அப்போதெல்லாம் என் திறமையை நிரூபித்துக் காட்டினேன். இந்திய அணிக்காக சில டி20 போட்டிகளில் 3 அல்லது 4வது இடத்தில் களமிறங்கி சிறப்பாக விளையாடியபோதும் என்னை அணியில் இருந்து நீக்கிவிட்டனர். இங்கு எவரும் பழைய நாட்களைப் பற்றி யோசிப்பதில்லை. அப்படி ஒருவேளை அதைப் பற்றி யோசித்தால், நான் இந்திய அணிக்காக சிறப்பாக செயல்பட்டதை அவர்கள் ஒப்புக்கொள்வார்கள் என்று அவர் கூறியுள்ளார். அப்பேட்டியில் தனது பௌலிங் திறமையை பற்றி கூறிய அவர், தற்போது ஐபிஎல் போட்டிகளில் ஐதராபாத் அணிக்காகவும் நான் சிறப்பாகத்தான் பந்து வீசியிருக்கிறேன் என்றும் கூறியுள்ளார்.

Vijay Shankar

விஜய் சங்கர் உள்ளூர் போட்டிகளில் தற்போது தமிழ்நாடு அணிக்காக விளையாடி வருகிறார். இந்திய அணியில் இடம் பிடிப்பதற்காக, உள்ளூர் போட்டிகளில் வேறு மாநில அணிக்காக விளையாடப்போகும் முடிவையும் தான் எடுத்துள்ளதாகவும் அவர் கூறியிருக்கிறார். அந்த முடிவைப் பற்றி கூறிய அவர், நான் தமிழ்நாடு அணியிலிருந்து வெளியேறி மற்ற மாநில அணியில் விளையாடலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். மற்ற மாநில அணிகளில் எனக்கு 3 அல்லது 4வது இடத்தில் களமிறங்க வாய்ப்பு வழங்கப்படும். ஆனால் தமிழ்நாடு அணியில் எனக்கு அந்த வாய்ப்பை வழங்க மறுக்கின்றனர். என்னுடைய இந்த முடிவைக்கண்டு தமிழ்நாடு அணி, என்னை 3 அல்லது 4வது இடத்தில் களமிருக்கும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்று அவர் கூறியிருக்கிறார்.

- Advertisement -

Shankar 1

இதற்கு முன்னதாக ஐபிஎல் தொடரில் சொதப்பிய விஜய் சங்கரிடம், நீங்கள் இப்படியே விளையாடினால் எப்படி இந்திய அணியில் இடம்பிடிப்பீர்கள் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், இந்திய அணியில் இடம்பிடிக்க நான் நிறைய முயற்சிகளை செய்யமட்டேன் என்றும், அப்படி செய்தால் அது எனக்கு மிகுந்த மன அழுத்தத்தை தரும் என்றும் கூறியிருந்தார். ஆனால் தற்போது இந்திய அணியில் இடம் பிடிக்க தனது சொந்த மாநில அணியிலிருந்தே வெளியேற யோசித்துக் கொண்டிருக்கிறார் 3D ப்ளயேரான விஜய் சங்கர்.

Advertisement