இவருடன் இருக்கும் போட்டியை நினைத்தால் நான் தோத்துடுவேன். அப்புறம் அணியில் எனக்கு இடம் கிடடைக்காது – விஜய் ஷங்கர் வேதனை

Shankar
- Advertisement -

தமிழக வீரர் விஜய் சங்கர் வேகப்பந்து வீசும் ஒரு ஆல்ரவுண்டர் ஆவார். ஹர்திக் பாண்டியாவின் இடத்தை கடந்த சில வருடங்களாக பிடித்திருந்தார். ஹர்திக் காயம் அடையும் போதெல்லாம் இவர் தான் இந்திய அணிக்கு அழைக்கப்படும் வீரராக இருந்தார். அதன்படி ஹர்டிக் பாண்டியா காயமடைந்த தொடர்களில் அவருக்கு பதிலாக விஜய் ஷங்கரே விளையாடினார். ஆனால் இந்திய அணிக்கு ஆல்ரவுண்டர் வரிசையில் முதல் தேர்வு எப்போதும் ஹர்திக் பாண்டியா தான்.

Vijay Shankar

- Advertisement -

அதேநேரத்தில் இங்கிலாந்தில் நடந்த 50 ஓவர் உலகக் கோப்பை தொடரிலும் இந்திய அணிக்காக தேர்வு செய்யப்பட்ட விஜய் ஷங்கர். அந்த தொடரில் சொதப்பிய பிறகு அவர் அணியில் இருந்து வெளியேற்றப்பட்டார். மேலும் அதனைத்தொடர்ந்து அவரது தேர்விலும் பல்வேறு சர்ச்சைகள் வெடித்தது. அதன் பின்னர் தற்போது வரை அவருக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஹர்திக் பாண்டியா உடனான் போட்டி குறித்து விஜய் சங்கர் தற்போது பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : ஹர்திக் குறித்து நான் சிந்தித்துக் கொண்டிருக்க கூடாது. அவரைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தால் நான் தோல்வி அடைந்து விடுவேன். அதை விட்டு விட்டு எனது ஆட்டத்தில் நான் கவனம் செலுத்த வேண்டும். அப்படி செய்தால் எனக்கு வாய்ப்பு சரியாக கிடைக்கும். நன்றாகவும் சிறப்பாகவும் விளையாடினால் மக்கள் என்னைப் பற்றி பேசுவார்கள்.

Vijay-Shankar

இன்னும் சில வாய்ப்புகள் கிடைத்தால் போதும் இந்திய மீண்டும் இந்திய அணிக்குள் நுழைந்து விடுவேன். அதனால் மற்ற வீரர்களை பற்றி நாம் சிந்திக்க கூடாது என்று கூறியுள்ளார் விஜய் சங்கர்
தற்போது இந்திய அணியில் வேகப்பந்து வீசும் ஆல்ரவுண்டர் 3 பேர் இருக்கின்றனர். ஹர்திக் பாண்டியா ,விஜய் சங்கர், சிவம் துபே இவர்கள் மூவரிலும் ஹர்திக் பாண்டியாவிற்குத்தான் முன்னுரிமை கொடுக்கப்படும் என்பது எழுதப்படாத விதி.

Vijay Shankar

விஜய் ஷங்கருக்கு அடுத்ததாக பாண்டியாவிற்கு பதிலாக இந்திய அணியில் ஆல்ரவுண்டராக விளையாடினாலும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இவருக்கு பேட்டிங்கோ, பவுலிங்கோ கைகொடுக்கவில்லை அதனால் மீண்டும் காயத்திலிருந்து திரும்பியுள்ள பாண்டியாவிற்கு அடுத்து வரும் தொடர்களில் நேரடியாக வாய்ப்பு கொடுக்கப்படும் என்பது உறுதி.

Advertisement