தமிழ்நாடு அணியிலிருந்து வெளியேறிய விஜய் ஷங்கர் திரிபுரா அணிக்காக செய்த சம்பவம் – விவரம் இதோ

Vijay Shankar
- Advertisement -

இந்திய அணியில் ஒரு காலத்தில் 3டி வீரராக பார்க்கப்பட்ட விஜய் சங்கர் நாளடைவில் தனது மோசமான ஆட்டம் காரணமாக இந்திய அணியில் தனது இடத்தினை இழந்தார். அதோடு உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் தமிழ்நாட்டு அணிக்காக விளையாடி வந்த அவருக்கு தற்போது 34 வயதாகும் காரணமாக அண்மை காலமாக வாய்ப்புகள் மறுக்கப்பட்டு வருகின்றன. எனவே தமிழ்நாட்டு அணியில் இருந்து வெளியேற முடிவு செய்த அவர் திரிபுரா அணிக்காக ரஞ்சி போட்டிகளில் விளையாடுவேன் என்று அறிவித்திருந்தார்.

திரிபுரா அணிக்காக விளையாடி அசத்திய விஜய் ஷங்கர் :

அதன்படி தமிழக ரஞ்சி அணியில் இருந்து வெளியேறிய அவர் தற்போது திரிபுரா அணிக்காக விளையாடி வரும் வேளையில் இத்தனை ஆண்டுகால தனது கரியரில் இல்லாத அளவிற்கு தனது சிறப்பான ஆட்டத்தை திரிபுரா அணிக்காக தற்போது அசாம் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடியுள்ளார்.

- Advertisement -

இப்படி தமிழக அணியிலிருந்து வெளியேறி திரிபுரா அணிக்காக அவர் அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வகையில் அகர்தலாவில் நடைபெற்று வரும் ரஞ்சி கோப்பை எலைட் பிரிவு சி ஆட்டத்தில் திரிபுரா மற்றும் அசாம் ஆகிய அணிகள் மோதின.

இந்த போட்டியில் திரிபுரா அணி சார்பாக ஏழாவது வீரராக களமிறங்கி விளையாடிய விஜய் சங்கர் 143 பந்துகளை சந்தித்து 14 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்கள் என 150 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். அவரோடு நின்று விளையாடிய மற்றொரு வீரரான ஹனுமா விஹாரி 150 ரன்களை கடக்க அந்த அணியின் ஸ்கோர் 602 ரன்கள் தொட்டது. அதனால் அந்த அணி பெரிய ஸ்கோருடன் டிக்ளரும் செய்திருந்தது.

- Advertisement -

இந்த 2025-ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடியிருந்த விஜய் சங்கர் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்ததால் அவர் சிஎஸ்கே அணியிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்று பேசப்பட்டு வந்த வேளையில் தற்போது ரஞ்சி கோப்பை தொடரில் அவர் அடித்த 150 ரன்கள் மூலம் சிஎஸ்கே அணி தங்கள் முடிவை மாற்றிக் கொள்ளக்கூட நினைக்க வாய்ப்புள்ளது.

இதையும் படிங்க : 8 பந்தில் 8 சிக்ஸ்.. 11 பந்தில் 50.. ரஞ்சியில் சரவெடியாக இரட்டை உலக சாதனை படைத்த இந்திய வீரர்

ஆனாலும் தமிழக ரஞ்சி அணியை பொறுத்தவரை மீண்டும் அவருக்கு வாய்ப்பு கிடைக்காது என்றே தெரிகிறது. தமிழக ரஞ்சி அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் 34 வயதிலும் வெளிமாநில அணிக்காக தனது சிறப்பான செயல்பாட்டை விஜய் ஷங்கர் வெளிப்படுத்தியுள்ளது பலரது மத்தியிலும் பாராட்டினை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement