ஹார்டிக் பாண்டியா அவுட். தமிழக வீரர் இன். பாண்டியாவிற்கு பதிலாக அணியில் இடம்பிடித்த வீரர் – விவரம் இதோ

Pandya

இந்திய அணி தற்போது இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. அதனை தொடர்ந்து தற்போது ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாட இருக்கிறது. ஆஸ்திரேலிய தொடர் முடிந்ததும் உடனடியாக இந்திய அணி நியூசிலாந்து செல்கிறது.

Pandya 1

இந்நிலையில் இந்த தொடருக்கு முன்பாக தற்போது இந்தியா ஏ அணி நியூசிலாந்து சென்று நியூசிலாந்து அணிக்கு ஏ எதிராக 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த தொடருக்கான இந்திய ஏ அணியில் கடந்த சில தொடர்களாகவே காயத்தினால் சிகிச்சை பெற்று ஓய்வில் இருந்த பாண்டியா தேர்வு செய்யப்பட்டிருந்தார்.

ஆனால் தற்போது அவரின் உடற்தகுதி மீண்டும் முழுமையாக தகுதி பெறவில்லை என்றும் அவருக்கு பதிலாக தமிழ்நாடு கிரிக்கெட் அணியில் ஆல் ரவுண்டர் விஜய்சங்கர் நியூசிலாந்து சென்றுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த சுற்றுப் பயணத்துக்கான இந்திய ஏ அணியில் இடம்பெற்றிருந்த பாண்டியாவின் உடல் தகுதியை பரிசோதிக்கும் போது அவர் முழு உடல் தகுதி இல்லாதது தெரியவந்தது.

எனவே அவருக்கு பதிலாக விஜய்சங்கர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் இந்த நியூசிலாந்து தொடருக்கான இந்திய அணியில் இணைவார் என்று எதிர்பாத்த ரசிகர்களுக்கு இது வருத்தமாக அமைந்தது. இந்நிலையில் விஜய் சங்கர் நியூசிலாந்துக்கு புறப்படுவதற்கு முன் சக வீரர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை டுவிட்டர் பக்கத்திலும் பதிவிட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -