Worldcup : இவர்கள் இருவர் இருக்கும்வரை விஜய் ஷங்கர் உலகக்கோப்பை போட்டிகளில் களமிறங்குவது கடினம் – விவரம் இதோ

வரும் 30 ஆம் தேதி துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் உலககோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான அனைத்து

Vijay-Shankar
- Advertisement -

வரும் 30 ஆம் தேதி துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் உலககோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான அனைத்து அணிகளும் தயாராக உள்ளன. இந்த தொடரில் மொத்தம் 48 போட்டிகள் நடைபெற உள்ளன.

Vijay Shankar

இந்நிலையில், இந்தியாவில் தற்போது ஐ.பி.எல் தொடர் நடைபெற்று முடிந்தது. இந்திய அணி உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க இங்கிலாந்து சென்றடைந்தது. கடந்த பல தொடர்களாக இந்திய அணி மிகச்சிறந்த பார்மில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் உலகக்கோப்பை தொடரின் இந்தியா அணியின் வீரர்கள் இப்போதே தொடரை எதிர்கொள்ள தயாராகிவிட்டார்கள்.

- Advertisement -

இந்நிலையில் உலக கோப்பை அணியில் விஜய் சங்கர் தேர்வானது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. ஏனென்றால், அனுபவ வீரரான ராயுடு மற்றும் இளம் வீரரான ரிஷப் பண்ட் ஆகியோரை தேர்வு செய்யாமல் ஒருநாள் போட்டிகளில் 9 ஆட்டங்களில் மட்டுமே பங்கேற்றுள்ள விஜய் சங்கரை இந்திய அணி தேர்வு செய்தது. ஆனால் அணியில் இடம் பிடித்தும் அவரால் உலக கோப்பை தொடரில் ஒரு போட்டியில் கூட ஆட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதற்கு காரணம் யாதெனில் ஐபிஎல் தொடரில் விஜய்சங்கர் தொடர்ந்து தனது சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

Rahul

ஆனால் ராகுல் பஞ்சாப் அணியின் துவக்க வீரராக தொடர் முழுவதும் ரன் மழை பொழிந்தார் மேலும் ஹர்திக் பாண்டியா மும்பை அணிக்காக பல போட்டிகளில் வெற்றி பெற்று கொடுத்தது மட்டுமல்லாமல் தனது அதிரடியை வேற லெவல் வெளிப்படுத்தினார். எனவே இவர்கள் இருவருக்கும் உலகக்கோப்பை அணியில் ஆடும் 11 பேரில் இடம் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. ஒருவேளை ராகுலுக்கு மற்றும் பாண்டியாக்கு காயம் ஏற்பட்டால் அவருக்கு பதிலாக விஜய் சங்கர் விளையாட வாய்ப்பு இருக்கிறதே தவிர மற்றபடி அவர் களமிறங்காத இருக்க வாய்ப்பு மிகவும் குறைவு என்று கணிக்கப்படுகிறது.

Advertisement