3டி வீரரான இவரை மறந்துட்டாங்களா ? ஆளையே காணோம் பேச்சே அடிபடல – ரசிகர்கள் கிண்டல்

Vijay-Shankar
- Advertisement -

வங்கதேச அணி நவம்பர் மாதம் துவக்கத்தில் இந்தியா வந்து 3 டி20 மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில் இந்த தொடருக்கான டி20 அணி நேற்று தேர்வுக்குழு தலைவர் பிரசாத் தலைமையில் அறிவிக்கப்பட்டது.

Vijay Shankar

- Advertisement -

இதில் தொடர்ச்சியாக விளையாடி வரும் இந்த அணியின் கேப்டன் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு அவருக்கு பதிலாக ரோகித் சர்மாவுக்கு கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அணியில் இடம்பிடிப்பார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தமிழக வீரரான விஜய் ஷங்கர் இந்திய அணியில் தேர்வாகவில்லை.

உலக கோப்பை இந்திய அணியில் தேர்வான தமிழக வீரரான விஜய்சங்கர் அதன்பிறகு இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படவில்லை. ஏற்கனவே நன்றாக விளையாடி வந்த அம்பத்தி ராயுடுவுக்கு பதில் இடம் பிடித்த போது விஜய் சங்கர் மீது சர்ச்சை எழுந்தது. ஆனால் உலக கோப்பையின் பின்னர் அவரைப் பற்றிய பேச்சு இந்திய அணியில் எழவே இல்லை. மேலும் இந்திய அணி சங்கரை அவர்கள் ஒரு கணக்குக்கு கூட பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை என்பது இந்த தேர்வின் மூலம் தெரியவந்துள்ளது.

3டி வீரராக பார்க்கப்பட்ட இவரை ஏன் தற்போது 1டி வீரராக கூட இந்திய அணி பார்க்கவில்லை என்று ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றார்கள். மேலும் ஒரே ஒரு ஆறுதலாக தமிழக வீரரான வாஷிங்டன் சுந்தர் தொடர்ந்து இந்திய அணியில் இடம் பிடித்து வருவது குறிப்பிடத்தக்கது. விஜய் ஷங்கர் தற்போது தமிழ்நாடு அணிக்காக விஜய் ஹசாரே கோப்பையில் விளையாடிவருகிறார்.

Advertisement