இந்திய அணி ஒதுக்கிய நீங்கள் தான் எங்கள் அணியின் கேப்டன். விஜய் ஷங்கருக்கு கிடைத்த ஆதரவு – விவரம் இதோ

Shankar
- Advertisement -

இந்தியாவில் ஆண்டுதோறும் உள்ளூர் போட்டித்தொடர் ஆன ரஞ்சி டிராபி தொடருக்கான இந்த ஆண்டு சீசன் வரும் 9ஆம் தேதி முதல் துவங்குகிறது. மொத்தம் 38 அணிகள் பங்கேற்கும் இந்த தொடர் மிக சரியாக திட்டமிட்டபடி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடருக்கான தமிழக அணியும் தற்போது தயாராகி உள்ளது.

இந்த தமிழக அணியில் கேப்டனாக இந்திய அணியில் இருந்து சமீபத்தில் கழட்டி விடப்பட்ட இளம் ஆல்ரவுண்டர் விஜய்சங்கர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். 2019 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தேர்வான விஜய் சங்கர் அந்த தொடரில் சிறப்பாக விளையாட காரணத்தால் அந்த தொடருக்குப் பிறகு அணியில் இருந்து கழற்றி விடப்பட்டார். அதற்கு அடுத்து மூன்று தொடர்களில் விஜய் சங்கருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

தற்போது தமிழக அணியின் கேப்டனாக விஜய் ஷங்கர் முதல் இரண்டு லீக் ஆட்டங்களில் செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் சங்கரின் தலைமையில் அனுபவ வீரர்களான அஸ்வின், முரளி விஜய் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோருடன் சேர்த்து மொத்தம் 15 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஜனவரி மாதம் நியூசிலாந்து சென்று டெஸ்ட் தொடரில் விளையாட உள்ள இந்திய அணியில் அஸ்வினும் செல்ல உள்ளதால் அவருக்கு கேப்டன் பொறுப்பு வழங்கப்பட வில்லை.

Karthik

எனவே விஜய் சங்கருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது. மேலும் இந்திய அணியில் இடம் கிடைக்காவிட்டாலும் தற்போது தமிழக அணியில் கேப்டனாக விஜய் சங்கர் நியமிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது. ஒருவேளை அவர் இந்த வருடம் ஐபிஎல் போட்டிகளில் சாதிக்கும் பட்சத்தில் அவர் மீண்டும் இந்திய அணியில் இடம்பிடிக்க வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement