INDIA : விஜய் ஷங்கர் ஒருவேளை இந்த போட்டியில் ஆடவில்லை என்றால் இவருக்கு அணியில் இடம் கிடைக்கும்

நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகிறது. இந்திய அணி இதுவரை தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகளை வீழ்த்தி மூன்று

Shankar
- Advertisement -

நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகிறது. இந்திய அணி இதுவரை தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகளை வீழ்த்தி மூன்று வெற்றிகளையும், நியூசிலாந்துடனான மழையால் நின்ற போட்டியில் ஒரு டிரா என 7 புள்ளிகளில் உள்ளது.

Vijay-Shankar

- Advertisement -

இந்நிலையில் இந்திய அணியின் அடுத்த போட்டி இன்று 22ஆம் தேதி ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்திய அணியில் விஜய் ஷங்கர் இடம் குறித்து தற்போது முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

பயிற்சியில் ஈடுபட்டிருந்த விஜய் சங்கர் பும்ரா பந்துவீச்சில யார்க்கர் பந்தினை கணிக்க தவறி காலில் அடி வாங்கி வலியால் அவதிப்பட்டார் என்று தகவல் ஏற்கனவே நாம் அறிந்ததுதான். இந்நிலையில் ஒருவேளை இன்றைய போட்டியில் விஜய் ஷங்கர் முழுஉடற்தகுதி இல்லையென்றால் அவர் அணியில் விளையாடமாட்டார் என்றும் தெரிகிறது.

Pant

அப்படி விஜய் ஷங்கர் விளையாடமுடியாமல் போகும் பட்சத்தில் சீனியர் வீரரான தினேஷ் கார்த்திக் அல்லது இளம் அதிரடி வீரரான ரிஷப் பண்ட் ஆகியோரில் ஒருவர் அணியில் இணைந்து விளையாடுவார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisement