Worldcup : வலைப்பயிற்சியில் காயமடைந்த விஜய் ஷங்கர் பயிற்சி போட்டியில் விளையாடுவாரா ? – விவரம் இதோ

வரும் 30 ஆம் தேதி துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் உலககோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான அனைத்து

Vijay
- Advertisement -

வரும் 30 ஆம் தேதி துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் உலககோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான அனைத்து அணிகளும் தயாராக உள்ளன. இந்த தொடரில் மொத்தம் 48 போட்டிகள் நடைபெற உள்ளன.

Worldcup

- Advertisement -

இந்திய அணி உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க இங்கிலாந்து சென்றடைந்தது. கடந்த பல தொடர்களாக இந்திய அணி மிகச்சிறந்த பார்மில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் உலகக்கோப்பை தொடரின் இந்தியா அணியின் வீரர்கள் இப்போதே தொடரை எதிர்கொள்ள தயாராகிவிட்டார்கள்.

இந்நிலையில் இந்திய வீரர்கள் உலக கோப்பை தொடருக்கான தயாராகும் விதத்தில் பயிற்சி போட்டிகளில் பங்கேற்க உள்ளனர். இன்றைய பயிற்சி போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது. இதற்கான வலைப் பயிற்சியில் இந்திய அணி வீரர்கள் கலந்து கொண்டனர்.

shankar

அப்போது பயிற்சியில் ஈடுபட்ட ஆல்ரவுண்டர் விஜய் சங்கர் கலீல் அஹ்மது வீசிய பந்தில் வலது கையில் படுகாயமடைந்தார். பந்து தாக்கிய உடனே பயிற்சியிலிருந்து விஜய்சங்கர் வெளியேறினார். இதனால் இன்றைய நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் விஜய்சங்கர் பங்கேற்பது சந்தேகம் ஆகியுள்ளது. பயிற்சிப் போட்டியில் விளையாடும் விதத்தை வைத்து விஜய்சங்கர் ஆடும் லெவனில் இடம் பிடிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் முதலில் அவருக்கு சறுக்கல் ஏற்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement