Vijay Shankar : ஒரே பந்திலேயே உலகசாதனை நிகழ்த்திய விஜய் ஷங்கர் – விவரம் இதோ

Shankar
- Advertisement -

நேற்றைய இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியில் உலக கோப்பை தொடர்களில் முதல் முறையாக அறிமுகமானார் தமிழகத்தைச் சேர்ந்த வீரரான விஜய் சங்கர். இவர் நேற்றைய போட்டியில் பேட்டிங்கில் அதிகம் சோபிக்கவில்லை என்றாலும் பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்டார்.

Bhuvi

- Advertisement -

பேட்டிங்கில் 15 பந்துகளை சந்தித்த அவர் 15 ரன்களை மட்டுமே அடித்தார். அதன் பிறகு இந்திய அணி பந்து வீசிய போது தனது மூன்றாவது ஓவரை வீசிய புவனேஸ்வர் குமார் காயம் காரணமாக வெளியேற அந்த ஓவரில் மீதமிருந்த இரண்டு பந்துகளை விஜய் ஷங்கரை வைத்து வீசி முடிக்கலாம் என்று நினைத்த கோலி பந்துவீச விஜய் ஷங்கரை அழைத்தார்.

அதன்படி மீதமிருந்த இரண்டு பந்துகளை வீச ஷங்கரை கோலி அழைத்தார். அப்போது உலக கோப்பை தொடரில் தனது முதல் பந்தை வீச தயாரானார் விஜய்சங்கர். அப்போது களத்தில் பேட்டிங் செய்து கொண்டிருந்த இமாம் உல்ஹக் விஜய் ஷங்கர் வீசிய முதல் பந்திலேயே எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினார்.

Shankar 1

இதன்மூலம் உலக கோப்பை தொடரில் அறிமுகமான முதல் பந்தில் விக்கெட் எடுத்த வீரர் என்ற உலக சாதனையை விஜய் ஷங்கர் படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த போட்டியில் மொத்தமாக 5.2 ஓவர்கள் வீசிய விஜய் ஷங்கர் 22 ரன்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement