விஜய் ஷங்கர் திருமணம் செய்ய இருக்கும் பெண் யார் தெரியுமா ? – விஜய் ஷங்கரின் தந்தை பகிர்வு

Shankar

இந்தியாவில் கொரோனா வைரஸ் ஏற்படுத்திய பாதிப்பு காரணமாக கடந்த 4 – 5 மாதங்களாக எந்த ஒரு கிரிக்கெட் தொடரும் நடைபெறாததால் வீரர்கள் வீட்டிலேயே முடங்கி இருந்தனர். இந்நிலையில் இப்படி ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்த இந்த நேரத்தில் கிரிக்கெட் வீரர்கள் தங்களது சில முக்கிய முடிவுகளை எடுத்து வரும் வேளையில் சுழற்பந்து வீச்சாளர் சாஹல் சமீபத்தில் தனது தோழியை நிச்சயதார்த்தம் செய்தார்.

Shankar

அதனைத் தொடர்ந்து தற்போது மற்றொரு இந்திய வீரர் தனது நிச்சயதார்த்தத்தை சைலண்டாக முடித்துள்ளார். இந்திய அணிக்காக கடந்த 2018ஆம் ஆண்டு டி20 போட்டிகளில் இலங்கை அணிக்கு எதிராக அறிமுகமானவர் விஜய் ஷங்கர். இந்திய அணியின் ஆல்ரவுண்டரும் தமிழக வீரருமான விஜய் சங்கர் இதுவரை இந்திய அணிக்காக 12 ஒருநாள் போட்டிகள் மற்றும் 9 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

29 வயதாகும் விஜய் சங்கர் நேற்று 20 ஆம் தேதி வைஷாலி என்பவரை நிச்சயதார்த்தம் செய்துள்ளார். மேலும் அவரது நிச்சயதார்த்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளளார். அவரது இந்த பதிவினை கண்ட இந்திய அணியின் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் என அனைவரும் விஜய் சங்கருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

 

View this post on Instagram

 

💍 PC – @ne_pictures_wedding

A post shared by Vijay Shankar (@vijay_41) on

இந்நிலையில் நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்த விஜய் சங்கரின் தந்தை அவரது நிச்சயதார்த்தம் குறித்து கூறுகையில் : வைஷாலியுடன் விஜய் சங்கருக்கு ஜாதகம் உள்ளிட்ட பல சடங்குகளை பார்த்தே நிச்சயம் நடத்தினோம். மேலும் அவர் கிரிக்கெட் வீரர் என்பதால் நிறைய பயணம் செய்ய வேண்டும் அதற்கு ஏற்றார்போல் வைஷாலி அவருக்கு சரியான துணையாக இருப்பார் என்று கருதினோம். விஜய்க்கும் அவரை முழுவதுமாக பிடித்து இருந்தது.

- Advertisement -

அதன் பின்னரே திருமணத்தை உறுதி செய்தோம் என்றார். தொடர்ந்து பேசிய அவர் : விஜய் எப்போதும் சாதாரணமாகவே இருப்பார். அவருக்கு வித்தியாசமான ஹேர்ஸ்டைல், டாட்டூ போட்டுக் கொள்வது என எதுவும் பிடிக்காது. அவரைப்போல வைஷாலியின் சாதாரணமாக பெண்ணாக இருக்கிறார். எங்கள் வீட்டில் அருகில் இருக்கும் மண்டபத்தில் 40 பேர் மட்டும் கலந்து கொண்டு நிச்சயதார்த்தத்தை முடித்து விட்டோம் என்றும் அவர் கூறியுள்ளார்.