Vijay Shankar : மூணே மாசத்தில் இந்திய அணியில் விஜய் ஷங்கர் இடம் பிடிக்க பாண்டியாவும் ஒரு காரணம் தான் – விவரம் இதோ

வரும் மே மாதம் 30 ஆம் தேதி துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மடற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் உலககோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான

Vijay-Shankar
- Advertisement -

வரும் மே மாதம் 30 ஆம் தேதி துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மடற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் உலககோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான அனைத்து அணிகளும் தயார் என்றே கூறலாம். இந்த தொடரில் மொத்தம் 48 போட்டிகள் நடைபெற உள்ளன.

worldcup

- Advertisement -

உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இதுவரை 9 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 165 ரன்கள் மட்டுமே அடித்த விஜய் ஷங்கர் இடப்பிடித்துள்ளார். ராயுடு அணியில் இருந்து கழற்றி விடப்பட்டுள்ளார். இந்த விவகாரம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் விஜய் ஷங்கர் தேர்வானது எப்படி என்பது குறித்து தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி சாம்பியன்ஸ் கோப்பைக்கு பிறகு இந்திய அணியின் 4 ஆவது வீரருக்கு ராயுடுவிற்கு அதிக அளவில் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஆனால், ராயுடு எதிர்பார்த்த அளவு தனது திறமையை நிரூபிக்க தவறினார். ஆனால், விஜய் ஷங்கர் பேட்டிங், பவுலிங் மற்றும் பீல்டிங் என அனைத்திலுமே தன் திறமையை நிரூபித்து உள்ளார் என்றும் அணி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி ஹர்டிக் பாண்டியா தனியார் தொலைக்காட்சிக்கு ஒன்றிற்கு அளித்த பேட்டியில் பெண்கள் குறித்து தவறான கருத்து தெரிவித்தன் காரணமாக தற்காலிகமாக இந்திய அணியில் இருந்து தடை செய்யப்பட்டார். அப்படி பாண்டியா தடைசெய்யப்பட்ட நேரத்தில் இந்திய அணிக்கு தேர்வானவர் விஜய் ஷங்கர் ஆவார். இவ்வளவு குறுகிய நேரத்திலேயே அவர் இந்திய அணியில் இடம் பிடிக்க பந்தியாவின் இந்த தடைகாலமும் ஒரு காரணமாக அமைந்தது.

- Advertisement -

தனக்கு கிடைத்த இந்த சிறிய வாய்ப்பினை பயன்படுத்திக்கொண்ட விஜய் ஷங்கர் தனது திறமையினை நிரூபித்து கேப்டன் மற்றும் பயிற்சியாளர் மற்றும் தேர்வுக்குழு என அனைவரரின் கவனைத்தையும் ஈர்த்தார். அதனாலே அவருக்கு இந்த உலகக்கோப்பை வாய்ப்பு கிடைத்தது. ஒருவேளை ஹார்டிக் பாண்டியா தடை செய்யப்படாமல் இருந்தால் விஜய் ஷங்கர் நிச்சயம் இந்திய அணிக்கு தேர்வாகி இருக்கமாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Vijay Shankar

ஹார்டிக் பாண்டியா அந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு முப்பிலிருந்து அபாரமான பார்மில் இருந்தார். அனைத்து பிரிவுகளிலும் கலக்கி இந்தியிவின் சிறந்த ஆல்ரவுண்டராக வலம்வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement