சிட்னி டெஸ்ட் போட்டியில் நான் விளையாடி டிரா செய்ததும் டிராவிட் அனுப்பிய மெசேஜ் இதுதான் – விஹாரி நெகிழ்ச்சி

Vihari
- Advertisement -

இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2 க்கு 1 என்ற கணக்கில் கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தது. இந்த வெற்றியை தொடர்ந்து இந்திய அணிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில் படுதோல்வி அடைந்த இந்திய அணி 4 க்கு 0 என்ற கணக்கில் தொடரை இழக்கும் என்று பலர் கூறி இருந்தனர். ஆனால் அந்த கருத்துக்களை எல்லாம் தவிடு பொடியாக்கும் வகையில் இந்திய அணி சிறப்பாக விளையாடி தொடரை கைப்பற்றியது.

IND-1

இந்த தொடரின் மூன்றாவது போட்டி சிட்னியில் நடைபெற்ற போது காயத்துடன் விளையாடிய விஹாரி மற்றும் அஸ்வின் ஆகியோர் இணைந்து அந்த போட்டியை டிரா செய்து ஆச்சரியப்படுத்தினார். இந்நிலையில் அந்த போட்டி குறித்து விஹாரி அளித்துள்ள பேட்டியில் சிட்னி போட்டி நிறைவடைந்ததும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவருமான டிராவிட் தனக்கு மெசேஜ் அனுப்பி உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

- Advertisement -

மேலும் இதுகுறித்து பேசிய அவர் : சிட்னி டெஸ்ட் போட்டி முடிந்ததும் டிராவிட் சார் எனக்கு சிறப்பாக விளையாடினாய் நல்லதொரு ஆட்டத்தை நான் கண்டேன் என மெசேஜ் அனுப்பியதாக கூறியுள்ளார். அவரின் இந்த கருத்துக்களுக்கும் சரி, அவருக்கும் சரி என்றும் நன்றியுடன் இருப்பேன். டிராவிட் சார் எப்போதும் மதிப்புக்குரிய தலைவர். நான் இந்திய ஏ அணியில் தேர்ந்தெடுக்கப்படும் போது சிராஜ், கில், சைனி, அகர்வால் ஆகியோருடன் விளையாடினேன்.

Vihari

அப்போது டிராவிட் இந்திய ஏ அணியின் பயிற்சியாளராக இருந்தார். நாங்கள் ஏகப்பட்ட சுற்றுப்பயணங்கள் சென்று சிறப்பாகவே விளையாடினோம். இளைஞர்களை வழி நடத்துவதில் டிராவிட் மிகச் சிறந்தவர். எங்களுக்கு எப்போதெல்லாம் வழிகாட்டுதல் தேவைப்படுகிறதோ அப்போதெல்லாம் டிராவிட் எங்களுடன் இருப்பார்.

vihari 2

கடந்தமுறை ஆஸ்திரேலிய பயணத்தில் நான் வந்த போது கூட சார் நான் இந்திய அணிக்காக விளையாட போகிறேன் என்றேன். அதற்கு அவர் “நீ ரஞ்சி கோப்பையிலும், இந்திய ஏ அணிக்காகவும் சிறப்பாக விளையாடி உள்ளாய் தற்போது நாட்டுக்காக விளையாட தயாராகி விட்டாய் என்று அவர் கூறிய வார்த்தைகளே எனக்கு நம்பிக்கை ஏற்படுத்தியது என்று விகாரி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement