“கஷ்டப்படறவங்களுக்கு நீங்க பணம் கொடுக்க வேண்டியதுதானே” விஹாரியை விமர்சித்த ரசிகர் – தக்க பதிலடி விஹாரி

Vihari
- Advertisement -

இந்திய அணியின் டெஸ்ட் வீரரான ஹனுமா விஹாரி தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வரும் கவுண்டி கிரிக்கெட்டில் பங்கேற்று விளையாடி வருகிறார். ஆனாலும் இந்தியாவில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பு காரணமாக அங்கிருந்தபடியே சமூக வலைதளம் மூலம் தன்னால் முடிந்த உதவிகளை அவர் தேவையானவர்களுக்கு வழங்கிவருகிறார். அதன்படி தனது சமூக வலைதளத்தின் மூலம் அடிக்கடி உதவி தேவைப்படும் நபர்களுக்காக தனது வேண்டுகோளை வைத்து அதன் மூலம் கிடைக்கப்பெறும் உதவிகளை நேரடியாக அவர்களிடம் கொண்டு சென்று சேர்கிறார்.

அதேபோன்று விகாரி உருவாக்கிய ஒரு 100 நபர்களை கொண்ட குழு பிளாஸ்மா தேவைப்படும் மக்களுக்கு நேரடியாக உதவிகளையும் வழங்கி வருகிறது. அதுமட்டுமின்றி ஆக்சிஜன் சிலிண்டர், ஹாஸ்பிடல், பெட் என பல வகையான தேவைகளை அவர் அந்தக் குழுவின் மூலம் நிவர்த்தி செய்து வருகிறார். அதேபோன்று கடந்த சனிக்கிழமை விகாரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவிட்டு 22 வயதான இந்தப் பெண்ணின் அப்பாவும் சகோதரரும் தங்களது உயிருக்காக போராடி வருகிறார்கள் என்றும் ஒருநாளைக்கு இவர்களுக்கு சிகிச்சை செலவாக ஒன்றரை இலட்சம் தேவைப்படுவதால் உங்களால் இயன்ற உதவிகளை செய்யுங்கள் என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வேண்டுகோளை விடுத்திருந்தார்.

- Advertisement -

இந்நிலையில் அவரது அந்த பதிவினை கண்ட ஒரு ரசிகர் ” நீங்கள் ஏன் அந்த பணத்தை கட்டக்கூடாது நீங்கள்தான் ஒரு ஃபேமஸ் அதெலட் ஆச்சே” என்று தனது கமெண்ட்டினை பதிவிட்டிருந்தார். அந்த கமெண்ட்டை பார்த்த விகாரி சற்று கோபமடைந்து உங்களைப் போன்ற நபர்களை பார்ப்பது அசிங்கமாக இருக்கிறது. இந்தியா இப்படி ஒரு சூழலில் இருக்கும் பொழுது உங்களைப் போன்ற நபர்கள் இருப்பது உண்மையிலேயே அசிங்கமாக உள்ளது என்று அந்த ரசிகருக்கு நேரடியாக பதிலடி கொடுத்துள்ளார்.

இதற்கு முந்தைய பேட்டியில் விஹாரி கூறும்போது : நான் மக்களுக்கு தொடர்ச்சியாக உதவிகளை செய்து வருகிறேன். ஆனால் மிகவும் அடித்தட்டு மக்களுக்காக நான் உதவிகளை செய்ய காத்திருக்கிறேன். இந்த உதவிகளுக்கு பின்னர் எந்த ஒரு இன்வென்ஷன் அல்லது புகழ் வெளிச்சம் பெறவேண்டும் என்றெல்லாம் நினைத்து நான் இதனை செய்யவில்லை, நான் என்னை வெளிப்படுத்திக் கொள்ளவும் விருப்பபடவில்லை.

comment

என்னால் முடிந்தவரை அடித்தட்டு மக்களுக்காக தொடர்ச்சியாக உதவிகளை செய்து கொண்டே தான் வருவேன். மேலும் எனது ரசிகர்கள் மூலமாகவும் என்னுடைய குழு மூலமாகவும் நான் பாதிக்கப்படும் மக்களுக்காக தொடர்ச்சியான உதவிகளை செய்ய உள்ளேன் என்றும் அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement