பரிசளிப்பு விழாவின்போது கோலி என்னிடம் வந்து கூறியவை இதுதான். அவருக்கு பெரிய மனசுங்க – கோலியை புகழ்ந்த விஹாரி

Vihari-1
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் தற்போது முடிவடைந்துள்ளது. இந்த தொடரில் வெற்றிகரமாக ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் கோப்பைகள் என அனைத்து கோப்பைகளையும் இந்திய அணி கைப்பற்றியது.

- Advertisement -

இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடர் குறித்தும், கோலி குறித்தும் பேட்டியளித்த விஹாரி கூறியதாவது : இந்த தொடரை இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு கோப்பையை கைப்பற்றியது. இந்த தொடரில் எனது செயல்பாடு எனக்கு மிகவும் திருப்தி அளிக்கிறது. ஏனெனில் இந்த தொடர் எனக்கு ஒரு மிகப்பெரிய தொடராகும். இந்திய ஏ அணியுடன் நான் முன்கூட்டியே வெஸ்ட் இண்டீஸ் வந்ததால் என்னால் இங்குள்ள சூழ்நிலைகளை புரிந்து இங்கு சிறப்பாக விளையாட முடிந்தது.

முதல் போட்டியில் 7 ரன்களில் சதத்தை தவறவிட்டபோது எனக்கு வருத்தம் இல்லை. ஏனெனில் அணிக்கு தேவையான பங்களிப்பை அளித்ததாக நான் நினைத்தேன். மேலும் கோலியும் என்னை அப்போது பாராட்டினார். இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நான் சதம் அடித்ததும் அவர் என் சதம் குறித்து என்னிடம் பெருமையாகப் பேசினார். மேலும் இந்த தொடர் முழுவதும் என்னை கோலியும் ரவி சாஸ்திரியும் என்னை ஊக்கப்படுத்திக் கொண்டே இருந்தனர்.

vihari 2

அவர்களின் ஊக்கம் என்னை சிறப்பாக விளையாட வைத்தது. இந்த தொடரின் வெற்றிக்கு பிறகு பரிசளிப்பு விழாவின் போது கோலி என்னிடம் வந்து நீங்கள்தான் கோப்பை ஏந்த வேண்டும் இன்று என்னை கட்டித்தழுவி கூறினார். அவரின் இந்த குணம் மிகவும் அற்புதமானது கோலி தலைமையில் டெஸ்ட் போட்டியில் விளையாடுவது எனக்கு மகிழ்ச்சி என்று விஹாரி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement