டெஸ்ட் போட்டி மட்டுமல்ல நான் இதற்கும் தயாராக இருக்கிறேன் – விஹாரி பேட்டி

Vihari
- Advertisement -

இந்திய அணி தற்போது தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரை முடித்து அடுத்து அந்த அணிக்கு எதிரான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டி வரும் அக்டோபர் 2ஆம் தேதி துவங்க உள்ளது.

Vihari-1

- Advertisement -

இந்த தொடருக்கான இந்திய அணியில் நடுவரிசை ஆட்டக்காரராக இளம் வீரரான விகாரி தேர்வாகியுள்ளார். கடந்த ஆண்டு இங்கிலாந்து அணிக்காக தேர்வாகிய அவர் அங்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதற்கடுத்து தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் சிறப்பாக ஆடியதுடன் மேலும் தனது முதலாவது சதத்தை பதிவு செய்தார். இந்நிலையில் விகாரி பத்திரிகையாளர்களுக்கு பேட்டி ஒன்றினை அளித்துள்ளார்.

அதில் அவர் குறிப்பிட்டதாவது : நான் இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டியில் விளையாடுவதை மிகப் பெருமையாக நினைக்கிறேன். மேலும் எனது ஆட்டத்தை தற்போது மேம்படுத்தியும் வருகிறேன் கடந்த தொடரைப் போன்று இந்த தொடரிலும் நான் நிச்சயம் என்னுடைய பங்களிப்பை இந்திய அணிக்காக அளிப்பேன். என்னுடைய ஆட்டத்தை நான் நாளுக்கு நாள் மேம்படுத்திக் கொண்டே வருகிறேன்.

Vihari 1

நான் தற்போது டெஸ்ட் போட்டியில் மட்டுமல்ல இந்திய அணியின் ஒருநாள் போட்டிக்கு தயாராக இருக்கிறேன் என்று நினைக்கிறேன். ஏனெனில் அதற்காக ஆயத்தமாகி நான் பயிற்சிகளையும் மேற்கொண்டு வருகிறேன். என்னால் ஒருநாள் போட்டியில் சிறப்பாக ஆட முடியும் என்கின்ற நம்பிக்கை என்னிடம் உள்ளது இதனை இந்த தொடரில் நாம் நிரூபித்து காட்டுவேன் என்று விகாரி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement