விஹாரி மூலம் ரோஹித் சர்மாவுக்கு முடிவுக்கு வந்த டெஸ்ட் கிரிக்கெட் வாழக்கை – காரணம் இதுதான்

vihari
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் தற்போது முடிவடைந்துள்ளது. இந்த தொடரில் வெற்றிகரமாக ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் கோப்பைகள் என அனைத்து கோப்பைகளையும் இந்திய அணி கைப்பற்றியது. இந்த தொடரின் டெஸ்ட் போட்டிகளில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரோஹித் சர்மா இரண்டு போட்டிகளிலும் இடம்பெறவில்லை.

rohith

- Advertisement -

உலக கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடிய ரோகித் சர்மா மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரஹானே மற்றும் விகாரியின் வருகையால் ரோகித் சர்மா இடம் கேள்விக்குறியானது. இந்நிலையில் கோலி தொடர்ந்து ரோகித் சர்மாவை அணியில் எடுக்காமல் ரஹானே மற்றும் விகாரிக்கு இடமளித்தார். இதன்மூலம் மீண்டும் ரோகித் சர்மாவின் இடம் கேள்விக் குறியானது.

அதற்கேற்றார்போல் ரஹானே மற்றும் விகாரி ஆகியோர் இந்த தொடரில் தங்களது சிறப்பான பங்களிப்பை அளித்தனர். இருவரும் இந்தத்தொடரில் சதம் அடித்து அசத்தினார்கள். மேலும் விகாரி பேட்டிங் மற்றும் பந்து வீச்சு என இந்த தொடரில் அசத்த இனிவரும் தொடர்களில் ரோகித் சர்மாவின் இடம் முடிவுக்கு வந்துள்ளது என்றே கூறலாம்.

Vihari 1

மேலும் டெஸ்ட் போட்டிகளில் மட்டும் விளையாடி வரும் விஹாரி தொடர்ந்து தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் இனி வரும் ஆட்டங்களிலும் ரோஹித்தின் இடத்தை தட்டிப் பறிப்பார் என்பது உறுதியாகி உள்ளது. இதனால் விஹாரியின் மூலம் ரோஹித்தின் இடம் காலியாக உள்ளது என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. இருப்பினும் இந்திய அணியில் ரோஹித் இடம்பிடிக்க ஒரு வாய்ப்பு உள்ளது அதனை அடுத்த பதிவில் காண்போம்.

Advertisement