இங்கிலாந்து மண்ணில் டியூக்ஸ் பந்தில் எவ்வாறு கையாள்வது – ஹனுமா விஹாரி சக வீரர்களுக்கு கொடுத்த அட்வைஸ்

Vihari
- Advertisement -

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் ஆகியவற்றில் பங்குபெற இந்திய அணியானது இங்கிலாந்திற்கு சென்றுள்ளது. இந்தியா மிகப் பெரும் பலம் வாய்ந்த அணியாக இருந்தாலும் இங்கிலாந்து நாட்டின் சூழ்நிலை அவர்களை வெகுவாக பாதிக்கும் என்பதால் அதனை உள்வாங்கிக் கொண்டு அதற்கேற்றார்போல் இந்திய வீரர்கள் விளையாட வேண்டும் என்று பல்வேறு முன்னாள் வீரர்கள் தங்களுடைய கருத்துகளையும், இங்கிலாந்தில் தாங்கள் பெற்ற அனுபவத்தையும் ஆலோசனகளாக இந்திய அணிக்கு வழங்கி வருகின்றனர்.

INDvsNZ

இந்நிலையில் அங்கு ஏற்கனவே சென்று கவுண்ட்டி போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணியின் வீரரான ஹனுமா விஹாரி இங்கிலாந்தின் சுற்றுச் சூழல் எப்படி இருக்கும் என்பதை தன்னுடன் இருக்கும் சக இந்திய வீரர்களுக்கு தெரிவித்து இருக்கிறார். கவுண்ட்டி கிரிக்கெட்டில் வார்க்விக்‌ஷையர் அணிக்காக இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அங்கு விளையாடியுள்ள ஹனுமா விஹாரிக்கு, மற்ற இந்திய வீரர்களைவிட இங்கிலாந்து நாட்டின் சூழ்நிலை எப்படி இருக்கும் என்றும் அதற்கேற்றார்போல் எப்படி விளையாட வேண்டும் என்பது பற்றியும் நன்றாகவே தெரிந்திருக்கும். இதுகுறித்து பேசியுள்ள அவர்,

- Advertisement -

ட்யூக் பந்துகளில் விளையாடுவது அவ்வளவு எளிதான விடயம் கிடையாது. அந்த பந்துகளில் நாம் கொஞ்சம் மெதுவாகத் தான் விளையாட வேண்டும். அவசரப்பட்டு முன்கூட்டியே விளையாட சென்றால் நமது விக்கெட்டை எளிதாக இழக்க நேரிடும். மேலும் இங்கிலாந்தின் சூழ்நிலை எப்போதுமே மாறக்கூடிய ஒன்றாக இருக்கிறது. வெயில் அதிகமாக இருக்கும் நேரத்தில் பந்தானது அதிகமாக ஸ்விங் ஆகாமல் பேட்டிற்கு வருமென்பதால் அந்த சமயத்தில் பேட்டிங் விளையாட எளிதாக இருக்கும்.

vihari 2

அதுவே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டால் பேட்டிங் விளையாடுவது மிகக் கடினாமாக இருக்கும். எனவே இந்தியாவில் நாம் விளையாடுவது போல இங்கிலாந்தில் விளையாடி விட முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். இங்கிலாந்திற்கு சென்றுவிட்ட இந்திய அணி வீரர்கள் தற்போது மூன்று நாட்கள் தனிமை படுத்தப்பட்ட பிறகு பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

vihari

இந்திய அணி இந்த டியூக்ஸ் பந்தில் எவ்வாறு விளையாட போகிறார்கள் என்று அனைவரும் எதிர்பார்த்திருக்கும் வேளையில் இந்திய அணி தற்போது தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement