இவர் தான் என்னுடைய ரோல் மாடல்.! இங்கிலாந்தில் விளையாடுவது என் கனவு.! இந்திய இளம் வீரர் நெகிழ்ச்சி

- Advertisement -

இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி இரண்டு போட்டிகளுக்கு முரளி விஜய் மற்றும் குல்தீப் யாதவ் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக பிரிதிவி ஷா மற்றும் ஹனுமா விஹாரி ஆகியோர் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். வரும் ஆகஸ்ட் 30 துவங்க உள்ள 4வது டெஸ்ட் போட்டியில் இவர்கள் இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என நம்பப்படுகிறது.

vihari

- Advertisement -

அப்படி நடந்தால், அது அவர்களுக்கு அறிமுக போட்டியாக அமையும். மேலும், இந்திய அணியில் தேர்வானது குறித்து விஹாரி கூறியது: நான் இந்திய அணிக்கு தேர்வாவேன் என்ற நம்பிக்கை இருந்தது, ஆனால் இவ்வளவு சீக்கிரமாக இந்திய அணியிடமிருந்து அழைப்பு வரும் என்று ஒரு நாளும் நினைத்ததில்லை. முதல் தர போட்டிகளில் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருவதாகவே கருதுகிறேன்.

vihari 1

நான் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்ததில் இருந்தே vvs லக்ஷ்மன் அவர்களுடைய விளையாட்டை மிகவும் ரசிப்பேன். எனவே, அவரே எனது ரோல் மாடலாக வைத்து கிரிக்கெட் விளையாடி வருகிறேன். மேலும், என்னை போன்ற வீரர்களுக்கு இங்கிலாந்தில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடுவது கனவு. இப்போது என் கனவு நினைவாக போகிறது என்பதில் மிகுந்த மகிழ்ச்சி என்று கூறினார்.

laksman

கண்டிப்பாக எனக்கு கிடைத்த இந்த வாய்ப்பை பயன்படுத்தி நன்றாக ஆடுவேன். மேலும், என் வாழ்நாளில் மிக சிறந்த தருணமாக இதனை நினைக்கிறன் என்றும் தெரிவித்தார். முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் 57 ரன்களுக்கு
மேல் சராசரி வைத்துள்ளார். இதன் காரணமாகவே இவருக்கு இந்திய அணியில் இருந்து இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.

Advertisement