அடுத்தடுத்து ஆட்டமிழந்த கோலி, ரஹானே. இவரு மட்டும் ஈஸியா விளையாடுறாரு – பிட்ச் மாறிடுச்சா ?

- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி தற்போது சர்ச் மைதானத்தில் இன்று துவங்கி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் இந்திய அணியை பேட்டிங் செய்ய கேட்டுக்கொண்டது. அதனை தொடர்ந்து தற்போது இந்திய அணி தனது முதல்நாள் ஆட்டத்தை விளையாடி வருகிறது.

INDvsNZ

- Advertisement -

முதல் நாள் ஆட்டமான இன்று தேனீர் இடைவேளை வரை இந்திய அணி 53.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 194 ரன்கள் குவித்ததுள்ளது. துவக்க வீரர் பிரதியூஷா 54 ரன்களில் ஆட்டமிழக்க தற்போது சத்தீஸ்வர் புஜாரா 53 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார். கோலி, ரஹானே என அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிய ஹனுமா விஹாரி 55 ரன்கள் குவித்து ஆட்டமிழந்து வெளியேறினார்.

இந்த இன்னிங்சில் 70 பந்துகளை சந்தித்த விஹாரி 10 பவுண்டரிகளுடன் அதிரடியாக விளையாடி 55 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். ஆரம்பத்தில் சற்று பொறுமையாக விளையாடிய விகாரி அடுத்து நியூசிலாந்து அணி வீரர்கள் வீசிய ஷார்ட் பிட்ச் பந்துகளை எளிதாக அடித்து ஆடினார். அரைசதம் கடந்த பின்னர் பெரிய ஸ்கோருக்கு செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விகாரி 55 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறியது பற்றி ஏமாற்றத்தை கொடுத்தது.

Vihari

மேலும் விஹாரி ஆட்டமிழந்து வெளியேறியதும் தேனீர் இடைவேளை விடப்பட்டது. இன்றைய போட்டியில் மீதி 35 ஓவர்களுக்குகு மேல் இருப்பதால் முதல் இன்னிங்சில் இந்திய அணி எவ்வளவு ரன்கள் குவிக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement