இந்த போட்டியை நான் முடிக்கிறேன். அதுவும் கண்டிப்பா சிக்ஸ் அடிச்சி தான் முடிப்பேன் – தோனி குறித்து பகிர்ந்த வேணுகோபால் ராவ்

Venugopal
- Advertisement -

தோனி நீண்ட சடை முடியுடன் ஆடிய காலகட்டத்தில் தற்போது அவருக்கு ஹேட்டார்கள் ஆக இருக்கும் மக்கள் கூட அவர் அவருக்கு ரசிகர்களாக இருந்தார்கள். அந்த காலகட்டத்தில் அதிரடியை மட்டுமே காட்டிக் கொண்டிருப்பார்கள். அப்படித்தான் இலங்கை அணிக்கு எதிராக 145 பந்துகளில் 183 ரன் அடித்து வெற்றி பெற வைத்தார் 15 பவுண்டரிகள் 10 சிக்சர்கள் என்று அடித்து பட்டையை கிளப்பினார்

Dhoni 3

- Advertisement -

இந்த போட்டியின் போது மறு முனையில் நின்று கடைசியில் ஆடியவர் வேணுகோபால் ராவ் தோனி ஓய்வு பெற்ற பின்னர் அந்த போட்டியின் போது என்ன நடந்தது என்பது பற்றி பேசியிருக்கிறார். அவர் கூறுகையில்…

அந்த ஆட்டம் அவ்வளவு எளிதாக இருந்துவிடவில்லை. தோனி ஆடிய இந்த ஆட்டம் யாரும் நம்ப முடியாத ஆட்டம். சமிந்தா வாஸ் பந்தை திடீரென கவர் திசைக்கு மேல் தூக்கி சிக்ஸர் அடித்தார். நான் மிரண்டு போய்விட்டேன் நான் ஆறாம் நிலையில் களம் இறங்கினேன். இதன் காரணமாக நான் தான் அடித்து அணியை வெற்றிபெற வைப்பேன் என்று நம்பினேன்.

Dhoni

ஆனால் தோனி என்னிடம் வந்து நான் சிக்ஸர் அடித்து போட்டியை முடித்து வைக்கிறேன் என்று கூறினார். அதன் பின்னர் 2 பவுண்டரிகளை அடித்தார். மீண்டும் என்னிடம் வந்து நானே சிக்ஸர் அடிக்கிறேன் எனக்கு வாய்ப்பு கொடு என்று கேட்டார். அவ்வளவு பெரிய ஆட்டம் ஆடி விட்டு யாருக்கு தான் ஆசை இருக்காது. அந்த ஆட்டத்தின் போது தோனிக்கு காலில் தசைப்பிடிப்பு பிடிப்பு ஏற்பட்டது.

- Advertisement -

அதன் காரணமாக விரேந்தர் சேவாக் அவருக்கு மாற்று ஓட்டக்காரராக வந்தார் . நான் பந்துகளை தோனிக்காக விட்டுக்கொண்டே இருந்தேன். அப்போது என்னை பார்த்த சேவக் ‘அட என்னப்பா வேகமாக, முடித்து விடு’ என்று என்னிடம் கூறினார்.

Dhoni 1

ஆனால் தோனோ என்னிடம் வந்து இலக்கை நான் பார்த்துக்கொள்கிறேன் என்று நம்பிக்கை கொடுத்தார். அடுத்த ஓவர் துவங்கிய உடன் இரண்டு சிக்சர்கள் அடித்து தோனியை அணியை வெற்றிபெற வைத்தார். தோனி போன்ற ஒரு வீரன் நமக்கு கிடைப்பது மிகவும் அரிது என்று கூறியுள்ளார் வேணுகோபால் ராவ்.

Advertisement