- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இந்திய அணியின் அடுத்த டாப் ஆல்ரவுண்டராக நிதீஷ் ரெட்டி கண்டிப்பா மாறுவார் – முன்னாள் வீரர் நம்பிக்கை

இந்திய அணியின் இளம் நட்சத்திர வீரரான நிதிஷ் குமார் ரெட்டி கடந்த 2023-ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி இதுவரை 28 போட்டிகளில் விளையாடியுள்ளார். தனது முதல் சீசனிலேயே அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்திய அவருக்கு 2024 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக டி20 போட்டிகளில் அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்தது. அப்படி டி20 போட்டிகளில் அறிமுகமான அவர் 4 போட்டிகளில் 74 ரன்கள் குவித்தது மட்டுமின்றி 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.

அடுத்த டாப் ஆல்ரவுண்டர் நிதீஷ் ரெட்டி தான் : வேணுகோபால் ராவ்

அதோடு கடந்த ஆண்டு சர்வதேச டெஸ்ட் போட்டியில் அறிமுகமான அவர் 7 போட்டிகளில் விளையாடி ஒரு சதத்துடன் 343 ரன்கள் எடுத்தது மட்டுமின்றி 8 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். இந்திய அணியில் நட்சத்திர ஆல்ரவுண்டராக இருக்கும் ஹார்டிக் பாண்டியாவிற்கு அடுத்து ஒரு வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் தேவை என்கிற நிலையில் நிதீஷ் குமார் ரெட்டியே அடுத்த வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டராக தற்போது பார்க்கப்படுகிறார்.

- Advertisement -

அதன் காரணமாக அவருக்கு இந்திய டெஸ்ட் அணியில் தொடர்ச்சியான வாய்ப்புகளும் கிடைத்து வருகிறது. அதனால் அவர் மெல்ல மெல்ல தற்போது தனது திறனை மெருகேற்றி வருகிறார். கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த அவர் தனது பேட்டிங் திறனை நிரூபித்தார். அதுமட்டுமின்றி இங்கிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் அற்புதமான பந்துவீச்சை வெளிப்படுத்தி பந்துவீச்சு திறனையும் வெளிக்காட்டி இருந்தார்.

இதனால் அவர் மீது நம்பிக்கை வைத்துள்ள நிர்வாகமும் தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் அவருக்கு இடம் வழங்கியுள்ளது. இந்நிலையில் இந்தியாவின் அடுத்த டாப் ஆல்ரவுண்டராக நிதீஷ் குமார் ரெட்டி மாறுவார் என இந்திய அணியின் முன்னாள் வீரரான வேணுகோபால் ராவ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் :

- Advertisement -

எப்பொழுதுமே சிறிய டவுனில் இருந்து வரும் வீரர்களுக்கு நிறைய வெறி இருக்கும். அந்த வகையில் நிதீஷ் குமார் ரெட்டியும் தனது வாய்ப்பை மிகச் சிறப்பாக பயன்படுத்தி வெற்றிகரமான ஆல்ரவுண்டராக மாறுவார் என்று நினைக்கிறேன். சிறுவயதிலிருந்து மிகச்சிறப்பாக விளையாடி வரும் அவர் ஐபிஎல் தொடரின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்து இருந்தார்.

இதையும் படிங்க : இனிமேலும் இந்தியாவுக்கு பாகிஸ்தான் எதிரியல்ல.. அந்த லிஸ்ட்ல கடைசியா இருப்பாங்க.. போபாரா ஓப்பன்டாக்

தற்போது பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் சிறப்பாக செயல்படும் அவர் இன்னும் சில ஆண்டுகளில் மிகப்பெரிய ஆல்ரவுண்டராக உருவெடுப்பார். அதனால் நான் அவரை ஹார்டிக் பாண்டியாவுடன் ஒப்பிடவில்லை. ஏனெனில் பாண்டியா அனுபவம் வாய்ந்த வீரர். நிதீஷ் ரெட்டி தற்போது தான் வளர்ந்து வருகிறார். அவரது திறனை நிச்சயம் அவர் மேம்படுத்திக் கொள்வார் என்றும் வேணுகோபால் ராவ் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -