2007-ல் பவுல் அவுட் ஓவருக்கு உத்தப்பா மற்றும் சேவாக்கை பந்துவீச தோனி அழைக்க இதுவே காரணம் – வெங்கடேஷ் பிரசாத் பேட்டி

2007-wc
- Advertisement -

2007 ஆம் ஆண்டு தோனி தலைமையில் இந்திய அணியின் டி20 உலகக் கோப்பை தொடரை வென்றது. இந்த தொடரில் பல வித்தியாசமான முடிவுகளை தோனியிடம் இருந்து நாம் பார்த்திருப்போம். இதன் காரணமாகத்தான் இந்திய அணி கோப்பையை வென்றதை கண்கூட பார்த்திருப்போம். அப்படி எடுத்த ஒரு சில முடிவுகள் தான் தற்போது வரை தோனியை பேச வைத்துக் கொண்டிருக்கிறது.

2007 t20 worldcup

- Advertisement -

தோனி கேப்டன் ஆன உடன் அவரிடம் இளம் வீரர்கள் மட்டுமே கொடுக்கப்பட்டனர். ராபின் உத்தப்பா, ஹர்பஜன்சிங், விரேந்தர் சேவாக் ரோகித் சர்மா ஆகிய வீரர்களை வைத்து தான் வெற்றி பெற்றார். முதல் போட்டியிலேயே இந்த தொடரில் நமக்கு ஒரு சின்ன சோதனை வந்தது அதை தோனி தனது சாத்தியமான முடிவினால் வென்று காட்டினார்.

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் இந்திய அணி டிரா செய்தது. இதன் காரணமாக அப்போது பவுல் அவுட் என்ற விதிமுறை இருந்தது. ஒரு ஓவரில் எந்த அணி ஸ்டம்பை பார்த்து அடிக்க்கிறதோ அந்த அணிதான் வெற்றி. இப்போது இருக்கும் சூப்பர் ஓவருக்கு மாற்று தான் அந்த விதி.

2007

பாகிஸ்தான் அணி இதனை பெரிதாக எடுத்துக்கொண்டு சாகித் அப்ரிடி, உமர் குல் என அனுபவமான பந்துவீச்சாளர்களை களமிறக்கியது. அவர்கள் அனைவரும் சொதப்பி விட்டனர்.
ஆனால் இந்திய கேப்டன் தோனியோ விரேந்தர் சேவாக், ராபின் உத்தப்பா போன்ற பேட்ஸ்மேன்களை பந்துவீச அழைத்தார். அவரின் இந்த அணுகுமுறையை கண்டு கிரிக்கெட் நிபுணர்கள் குழம்பி நின்றனர்.

- Advertisement -

ஆனால் அதேசமயத்தில் தோனி செய்த மூவரும் சரியாக போல்ட் எடுக்க இந்திய அணி அந்த போட்டியில் வெற்றிபெற்றது. தற்போது இது குறித்து பேசியுள்ள அப்போதைய பந்து வீச்சு பயிற்சியாளர் வெங்கடேஷ் பிரசாத். இதுகுறித்து அவர் கூறுகையில்… நாங்கள் இந்த விதியை பற்றி முன்னரே யோசித்து வைத்திருந்தோம். அப்போது கேப்டனாக இருந்த தோனி பேட்ஸ்மேன்களும் பந்து வீச வேண்டும் என்று விரும்பினர்.

Uthappa 1

தோனி, ராபின் உத்தப்பா, சேவாக் என பேட்ஸ்மேன்கள் பெரும்பாலும் அனைவருமே ஆடுகளத்தில் வலைப்பயிற்சியில் பந்து வீசி விளையாடினர். குறிப்பாக இந்த பவுல் அவுட் விதிமுறைக்காக ராபின் உத்தப்பா ஆகியோர் நன்றாக வீசி பயிற்சி செய்தனர் .தோனி அப்போது சாமர்த்தியமான முடிவினை எடுத்து இவர்களிடம் பந்தை கொடுத்தார் இதன் காரணமாகத்தான் நம்மால் வெல்ல முடிந்தது என்று கூறியுள்ளார்.

Advertisement