உருளை கிழங்கு உடம்பு தான் சர்ஃப்ராஸ் கான் வாய்ப்பை தடுக்குதா? விமர்சனங்களுக்கு வெங்கடேஷ் பிரசாத் கொடுத்த பதிலடி என்ன

Venkatesh prasad Sarfaraz khan
- Advertisement -

வரும் ஜூன் மாதம் லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெற பிப்ரவரி மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெறும் பார்டர் – கவாஸ்கர் கோப்பையை வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இந்திய கிரிக்கெட் அணி உள்ளது. அத்தொடருக்காக அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் சூரியகுமார் யாதவ் மற்றும் இசான் கிசான் ஆகியோர் முதல் முறையாக தேர்வு செய்யப்பட்ட நிலையில் சர்ப்ராஸ் கான் மீண்டும் புறக்கணிக்கப்பட்டது யாரையுமே மகிழ்ச்சியடைய வைக்கவில்லை. இத்தனைக்கும் இசான் கிசான் மற்றும் சூரியகுமார் ஆகிய இருவருமே உள்ளூர் முதல் தர கிரிக்கெட்டில் 45க்கும் குறைவான பேட்டிங் சராசரியை மட்டுமே வைத்துள்ளனர்.

ஆனால் கடந்த 3 வருடங்களாக ரஞ்சி கோப்பையில் முரட்டுத்தனமாக செயல்பட்டு வரும் சர்பராஸ் கான் 2019/20, 2021/22 சீசன்களில் முறையே 928, 982 ரன்களை விளாசி ரன் மெஷினாக செயல்பட்டு வருகிறார். மேலும் 80+ பேட்டிங் சராசரியை வைத்துள்ள அவர் உலக அளவில் உள்ளூர் முதல் தர கிரிக்கெட்டில் 50 இன்னிங்ஸில் விளையாடிய வீரர்களுக்கு மத்தியில் ஜாம்பவான் டான் பிராட்மேனனுக்கு பின் அதிக சராசரியை கொண்ட வீரராக சாதனை படைத்து வருகிறார்.

- Advertisement -

பிட்னெஸ் தடையா:
இருப்பினும் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் அசத்திய சூரியகுமார் மற்றும் இசான் கிசான் ஆகியோர் சம்பந்தமின்றி டெஸ்ட் அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். ஆனால் உண்மையாக இந்திய டெஸ்ட் அணிக்கு இந்திய உள்ளூர் டெஸ்ட் தொடரான ரஞ்சி கோப்பையில் அசத்தும் சர்பராஸ் தான் தேர்வு செய்ய வேண்டும் என்பதைக் கூட தெரியாத சேட்டன் சர்மா தேர்வு குழுவினர் என்னதான் செய்கிறார்கள் என இர்பான் பதான் போன்ற நிறைய முன்னாள் வீரர்கள் கடுமையாக விமர்சித்தனர். அந்த வகையில் அவரை கழற்றி விட்டுள்ளது வரலாற்று சிறப்பு மிக்க ரஞ்சிக் கோப்பைக்கு செய்த அவமானம் என்று ரசிகர்களும் கடுமையாக சாடினார்கள்.

முன்னதாக கடந்த வருட ரஞ்சிக்கோப்பை பைனலில் சதமடித்த போது டிசம்பர் மாதம் வங்கதேச மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் தேர்வு செய்யப்படுவீர்கள் என்று சேட்டன் சர்மா தம்மிடம் வாக்குறுதி கொடுத்ததாக சமீபத்தில் சர்பராஸ் கான் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். இருப்பினும் தமக்கான நேரம் வரும் என்று தன்னம்பிக்கையுடன் ரஞ்சி கோப்பையில் தொடர்ந்து விளையாடி வரும் அவர் டெல்லிக்கு எதிராக தற்போது நடைபெற்று வரும் போட்டியில் முதல் இன்னிங்ஸ்சில் இதர வீரர்கள் தடுமாறிய போது மும்பை எடுத்த 293 ரன்களில் 125 (155) ரன்கள் விளாசி சதமடித்து மீண்டும் தேர்வுக்குழுவுக்கு பதிலடி கொடுத்தார்.

- Advertisement -

அதனால் இந்தியாவுக்கு விளையாட இன்னும் இவர் என்னதான் செய்ய வேண்டும் என்பதே அனைவரது கேள்வியாக இருக்கிறது. இருப்பினும் இந்தியாவுக்காக விளையாடுவதற்கு நல்ல ஃபிட்டான உடல் தகுதி அவசியமாக பார்க்கப்படும் நிலையில் சற்று உயரம் குறைவாகவும் லேசாக பருமனாக இருக்கும் சர்ப்ராஸ் கான் உருளைக்கிழங்கு போல் இருக்கும் தனது உடம்பை சற்று குறைக்க வேண்டும் என்பது ஆரம்ப முதலே சில ரசிகர்களின் கருத்தாக இருந்து வருகிறது.

ஆனால் இவ்வளவு ரன்கள் அடிக்கும் சர்ப்ராஸ் கானை விட அதிக எடை உடையவர்கள் சர்வதேச கிரிக்கெட்டில் தங்களது நாட்டுக்காக விளையாடுவதாக முன்னாள் இந்திய வீரர் வெங்கடேஷ் பிரசாத் அவருடைய ஃபிட்னஸ் பற்றிய விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார். மேலும் கடந்த 3 சீசன்களாக அசத்தியும் அவர் தேர்வு செய்யப்படாதது ரஞ்சிக் கோப்பைக்கு நிகழ்ந்த மிகப்பெரிய அவமானம் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி ட்விட்டரில் விமர்சித்துள்ளது பின்வருமாறு.

- Advertisement -

“உள்ளூர் கிரிக்கெட்டில் கடந்த 3 சீசன்களில் ப்ளாக்பஸ்டர் செயல்பாடுகளை வெளிப்படுத்தியும் சர்பராஸ் கான் டெஸ்ட் அணியில் இடம் பெறாதது அநியாயம் மட்டுமல்ல உள்ளூர் கிரிக்கெட்டுக்கு செய்யப்பட்ட ஒரு துஷ்பிரயோகம். தற்போது உள்ளூர் கிரிக்கெட்டை ஒரு பொருட்டாக யாருமே மதிப்பதில்லை. இந்த ரன்களை எடுப்பதற்கு அவர் ஏற்கனவே ஃபிட்டாக தகுதியானவர். உடல் எடையை பொறுத்த வரையில் அவர் அவரை விட அதிக கிலோவுடன் பலர் உள்ளனர்” என்று கூறினார்.

இதையும் படிங்க: IND vs NZ : அதிரடி தொடக்கத்தை கொடுத்த ரோஹித் சர்மா – தோனியை முந்தி புதிய வரலாற்று சிக்சர் சாதனை (வீடியோ இணைப்பு)

அவர் கூறுவது போல பாகிஸ்தானின் இன்சமாம்-உல்-ஹக் சர்ப்ராஸ் கானை விட அதிக உடல் எடையுடன் இருந்தும் வெற்றிகரமாக அதிக ரன்கள் குவித்த பாகிஸ்தான் வீரராக சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement