கங்குலியின் அணியில் இருந்த முன்னணி வேகப்பந்து வீச்சாளர். பந்துவீச்சு பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பம் – விவரம் இதோ

Vengatesh-Prasad
- Advertisement -

இந்திய அணியின் முதன்மை பயிற்சியாளர் மற்றும் பீல்டிங், பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என அனைத்து வகையான பயிற்சியாளர் பதவியும் நடந்த உலகக் கோப்பைத் தொடரோடு முடிவடைந்தது. இந்நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரின் காரணமாக அனைவரது பதவிக்காலமும் 45 நாட்கள் நீட்டிக்கப்பட்டது.

ravi koli 2

அதனைத் தொடர்ந்து பிசிசிஐ அனைத்து பயிற்சியாளர் பதவிக்கும் விண்ணப்பிக்க ஜூலை மாதம் 30 ஆம் தேதி வரை கால அவகாசத்தை நீட்டித்தது. தொடர்ந்து நேற்று முன்தினத்தோடு அந்த விண்ணப்பிக்கும் நாள் முடிவடைந்தது.

- Advertisement -

இந்த பதவிக்கு தகுதியான நபர்களை தேர்ந்தெடுக்க இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள் அடங்கிய குழு கபில்தேவ் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. கபில்தேவ் கெயிக்வாட் மற்றும் சாந்தாரங்கசாமி உள்ளிட்டோர் அடங்கிய குழு புதிய பயிற்சியாளரை தேர்ந்தெடுக்க உள்ளது. வரும் ஆகஸ்ட் 13 மற்றும் 14-ம் தேதி நேர்காணல் நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.

Vengatesh prasad 2

இந்நிலையில் பந்துவீச்சு பயிற்சியாளர் பதவிக்கு இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான வெங்கடேஷ் பிரசாத் விண்ணப்பித்துள்ளதாக தெரிகிறது. கங்குலி கேப்டனாக இருந்த காலத்தில் முன்னணி பந்துவீச்சாளராக இருந்த அவர் தற்போது இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக அதிக வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது. ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு பயிற்சியாளராக இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Advertisement