என்னை கோபப்படுத்திய தோனி. அதன் பின் அசுரவளர்ச்சி அடைந்தார் – மறைந்த வி.பி சந்திரசேகரின் பதிவு

VB
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், டிஎன்பிஎல் அணியின் உரிமையாளரான விபி சந்திரசேகர் கடந்த 15ஆம் தேதி தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். அவர் நிதி நெருக்கடியின் காரணமாக அவரது அறையில் பேனில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார் என்று போலீசார் கொடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

- Advertisement -

இந்நிலையில் அவர் தோனி குறித்து சந்திரசேகர் அளித்த பழைய பேட்டி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் தோனி குறித்து சந்திரசேகர் கூறியதாவது : நான் இந்திய அணியின் தேர்வுக் குழுவில் இருக்கும் பொழுது தோனி என்னை சரியான நேரத்தில் சந்திக்கவில்லை. அதனால் அவர் மீது நான் கோபம் கொண்டேன். மேலும் தோனி யார் என்று எனக்கு தெரியாது, அவரை நான் நேரில் பார்த்ததில்லை.

ஆனால் தோனி விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேனாக சிறப்பாக ஆடுவார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். நான் முதல் முறை தோனியை சந்தித்தது ஹைதராபாத்தில் தான். நான் அப்பொழுது தேர்வுக் குழுவில் இருந்தேன். பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய ஏ அணிக்கு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் வேண்டும் என்று கேட்டார்கள். மேலும் போட்டி நாளை காலை துவங்கி இருக்கிறது என்றால் இன்று இரவு வரை விக்கெட் கீப்பர் கிடைக்கவில்லை நான் தோனி அழைக்க திட்டமிட்டேன்.

ஆனால் தோனியை தொடர்புகொள்ள நிறைய பேரிடம் கேட்டும் அவரை சரியான நேரத்தில் அணுக முடியவில்லை. அப்பொழுதுதான் தோனி எனக்கு முதல் முறையாக அறிமுகமானார். இரவு நீண்ட நேரம் ஆனதால் நான் அறைக்குத் திரும்பினேன். அப்பொழுது இரவு 11 மணியளவில் யாரோ கதவை தட்டினார்கள். நான் திறந்து பார்த்தேன் பணியாளராக இருக்குமோ என்று நினைத்தேன்.

Dhoni

அப்போது ஒரு ஒருவர் நீளமான முடியுடன், சிறிய புன்னகையிட்டு நான் தான் தோனி என்று அறிமுகம் செய்து கொண்டார். அதுதான் எனக்கு அணியுடனான முதல் சந்திப்பு அப்போது நான் அவர் மீது கோபப்பட்டேன் ஆனால் அதன்பிறகு தோனி இவ்வளவு பெரிய அசுர வளர்ச்சி கண்டது என்னை பிரமிக்க வைத்தது என்று வி.பி சந்திரசேகர் பேட்டியளித்திருந்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தோனி தேர்ந்தெடுத்து கேப்டன் ஆகியதும் வி.பி சந்திரசேகர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement