ஜடேஜா விஷயத்தில் பி.சி.சி.ஐ செய்தது ரொம்ப தப்பு. அவமானமா இருக்கு – மைக்கல் வாகன் காட்டம்

Vaughan
- Advertisement -

பிசிசிஐ ஒவ்வொரு ஆண்டும் அதனுடைய காண்ட்ராக்ட் வீரர்களின் பட்டியலை வெளியிடும். அப்படியே சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் முதல் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரையிலான ( அக்டோபர் 2020 – செப்டம்பர் 2021) வீரர்களின் பட்டியலை பிசிசிஐ தற்பொழுது வெளியிட்டுள்ளது.
இந்த காண்ட்ராக்ட் நான்கு விதமாக பிரிக்கப்படும். கிரேடு A+ கீழ் விளையாடும் வீரர்களின் ஆண்டு வருமானம் ரூபாய் 7 கோடி ஆகும். கிரேடு A கீழ் விளையாடும் வீரர்களின் ஆண்டு வருமானம் ரூபாய் 5 கோடி ஆகும். கிரேடு B கீழ் விளையாடும் வீரர்களின் ஆண்டு வருமானம் ரூபாய் மூன்று கோடி ஆகும். கடைசி கிரேடான கிரேடு C கீழ் விளையாடும் வீரர்களின் ஆண்டு வருமானம் ரூபாய் ஒரு கோடி ஆகும்.

ind

- Advertisement -

இந்த ஆண்டு பிசிசிஐ வெளியிட்ட காண்ட்ராக்டில் புதிதாக மூன்று வீரர்கள் இணைந்து உள்ளனர், அவர்களில் அக்சர் பட்டேல், சுப்மன் கில் மற்றும் முகமது சிராஜ் ஆகும். இவர்கள் மூவரும் கிரேடு C வீரர்கள் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளனர்.மணிஷ் பாண்டே மற்றும் கேதர் ஜாதவ் ஆகிய இருவரும் காண்ட்ராக்டில் இருந்து நீக்கப்பட்டனர்.

ஹர்திக் பாண்டியா கிரேடு B யிலிருந்து கிரேடு A வீரர்கள் பட்டியலுக்கு முன்னேறியுள்ளார். அதேபோல ஷர்துள் தாக்கூர் கிரேட் C யிலிருந்து கிரேடு B வீரர்கள் பட்டியலுக்கு முன்னேறி உள்ளார். மறுபக்கம் புவனேஷ்வர் குமார் கிரேடு A வீரர்கள் பட்டியலில் இருந்து கிரேடு B வீரர்கள் பட்டியலுக்கு சென்றுள்ளார். அதேபோல சஹால் கிரேடு B வீரர்கள் பட்டியலில் இருந்து கிரேடு C பட்டியலுக்கு சென்றுள்ளார். குல்தீப் யாதவ் கிரேடு A பட்டியலிலிருந்து கிரேடு C வீரர்கள் பட்டியலுக்கு பின்தங்கியுள்ளார்.

IND

கிரேடு A+ வீரர்கள்

- Advertisement -

விராட் கோலி, ரோகித் சர்மா மற்றும் ஜஸ்பிரித் பும்ரா

கிரேடு A வீரர்கள்

- Advertisement -

ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, புஜாரா, அஜிங்கிய ரஹானே, ஷிகர் தவான், கே எல் ராகுல், முகமது ஷமி, இஷாந்த் சர்மா, ரிஷப் பண்ட் மற்றும் ஹர்திக் பாண்டியா

கிரேடு B வீரர்கள்

- Advertisement -

விருத்திமான் சஹா, உமேஷ் யாதவ், புவனேஷ்வர் குமார், ஷர்துல் தாகூர் மற்றும் மயங்க் அகர்வால்

கிரேடு C வீரர்கள்

குல்தீப் யாதவ், சைனி, தீபக் சஹர், சுப்மன் கில், ஹனுமன விஹாரி, அக்சர் பட்டேல், ஸ்ரேயாஸ் இயர், வாஷிங்டன் சுந்தர், சஹால் மற்றும் முகமது சிராஜ்

Jadeja 2

இந்நிலையில் இந்த பிசிசிஐயின் கான்ட்ராக்ட் லிஸ்டில் ரவிந்திர ஜடேஜா ஏ பிரிவில் இடம்பெற்றுள்ளது குறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான மைக்கேல் கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் : ஜடேஜாவுக்கு (ஏ ப்ளஸ்) பிரிவில் இடம் வழங்காதது அவமானம் என்று அவர் தெரிவித்துள்ளார். கோலி ரோகித், பும்ரா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். அந்த வகையில் இந்திய அணியின் மூன்று வகையான அணியிலும் முக்கிய வீரராக விளையாடி வரும் ஜடேஜாவுக்கு ஏ ப்ளஸ் பிரிவு வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் அவர் தனது கருத்தினை பகிர்ந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement