தனது ஸ்டைலில் ராஜா போன்று நிஜ போர்வாளை சுழற்றிய ஜடேஜா. கிண்டல் செய்த இங்கிலாந்து வீரர்

Jadeja
- Advertisement -

கிரிக்கெட் போட்டிகளில் அரைசதம் அடித்த பின்னர் ஜடேஜா செய்யும் ஸ்வார்ட் செலிப்ரேஷன் (பேட்டை வாள் போன்று சுற்றுதல்) பேட்டை வைத்து சுழற்றுவதைப் போல, வீட்டில் சும்மா இருக்கும் நேரத்தில் தனது வாளை எடுத்து சுழற்றி இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார் ரவிந்திர ஜடேஜா. இந்த வீடியோவை கண்ட முன்னாள் இங்கிலாந்து வீரர் மைக்கேல் வாகன் அவரை கலாய்த்துள்ளார்.

கரோனா வைரஸ் காரணமாக வீட்டில் முடங்கியுள்ள கிரிக்கெட் வீரர்களால் சும்மா இருக்க முடியாது போலிருக்கிறது. பல வீரர்கள் தங்களது ரசிகர்களிடமும் முன்னாள் வீரர்களுடனும் உரையாடி வருகின்றனர். நேரலையில் உரையாடும்போது பல ஆக்கபூர்வமான தகவல்களை வெளியிட்டு வருகின்றனர்.

- Advertisement -

ஆனால், இன்னொரு பக்கம் மற்ற வீரர்கள் தேவையில்லாத கெத்து காட்டும் செயல்களை செய்து ரசிகர்களை தவறாக வழி நடத்தி வருகின்றனர். அதில் ஒருவர்தான் ஜடேஜா. களத்தில் மின்னல்வேக பீல்டராக வலம் வரும் அவர், ஆடு களத்திற்கு வெளியே தன்னை ஒரு ராஜாவாக நினைத்துக்கொண்டு அவ்வபோது போருக்குச் செல்லும் ஒரு வாலை எடுத்து சுழற்றி விட்டு அதனை வீடியோ எடுத்து தனது சமூக வலைதளப் பக்கங்களில் பதிவு செய்வது வழக்கம்.

உண்மையிலே ராஜ வம்சாவளியை சார்ந்த ஜடேஜாவுக்கு வாள் சுழற்றுதல் மற்றும் குதிரை ஏற்றம் போன்றவை கைவந்த கலை. இதேபோல வாள் சுழற்றுதல் மற்றும் குதிரை ஏற்றத்தையும் அவ்வப்போது செய்து வீடியோ வெளியிடுவார். கிரிக்கெட் ஆடுகளத்தில் அரைசதம் அடித்து விட்டால், தனது பேட்டை ஒரு வாள் போன்று சுற்றி ரசிகர்களை மகிழ்ச்சி பெற வைப்பார்.

- Advertisement -

இந்நிலையில் வைரஸ் தாக்கம் காரணமாக வீட்டில் சும்மா இருக்க முடியாமல் ஒரு போர் வாளை எடுத்து தன்னை ஒரு போர் வீரனாக பாவித்துக் கொண்டு சுழற்றி வீடியோ வெளியிட்டுள்ளார் ரவிந்திர ஜடேஜா. அவர் ஒரு புல்வெளியில் நின்று கொண்டே இதனை செய்து கொண்டிருக்கிறார். இதனை பார்த்த முன்னாள் இங்கிலாந்து வீரர் மைக்கேல் வாகன், வீட்டில் புற்கள் உள்ளது, அந்த வாளை வைத்து அதை வெட்டி விடுங்கள் என்று கிண்டல் செய்தார்.

இதற்கு பதிலளித்த ரவீந்திர ஜடேஜா எப்படி வெட்ட வேண்டும் என்று எனக்கு தெரியாது என்று கூறியுள்ளார். ஆனால் இதுபோன்று போர் வாளை எடுத்து சுற்றுவது, அரசு அனுமதி இல்லாமல் துப்பாக்கியை எடுத்து வெறுமனே சுட்டு விளையாடுவது என இது போன்று பல பிரபலங்கள் ரசிகர்களை தவறாக வழி நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இது பல வன்முறைகளுக்கும் காரணமாக அமைய வாய்ப்புள்ளது. இவர்களைப் பின்பற்றும் ரசிகர்களும் இதனை செய்ய மாட்டார்கள் என்று எந்த உத்தரவாதமும் இல்லை.

Advertisement