டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் குறித்த விராட் கோலியின் கருத்து. பதிலடி கொடுத்த வாகன் – விவரம் இதோ

Vaughan
- Advertisement -

நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்ததை அடுத்து இந்திய அணியின் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. மேலும் எளிதாக டிரா செய்திருக்க வேண்டிய இந்த போட்டியில் இந்திய அணி தோற்றது ரசிகர்களிடையே பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த இறுதி போட்டி முடிந்து தோல்வி குறித்து இந்திய அணி கேப்டன் கோலி நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் :

IND

- Advertisement -

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்க ஒரு போட்டி போதாது என்றும் இனி வரும் சாம்பியன்ஷிப் தொடரில் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட இறுதி ஆட்டம் நடத்த வேண்டும் என கோலி தனது கருத்தை தெரிவித்திருந்தார். மேலும் அவர் கூறுகையில் : யார் சிறந்த டெஸ்ட் அணி என்பதை ஒரே போட்டியில் தீர்மானித்து விட முடியாது.

எனவே அடுத்து வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிகள் 3 ஆட்டங்கள் கொண்ட போட்டியாக நடைபெற வேண்டும் என்று கூறினார். இந்த இறுதிப் போட்டி துவங்குவதற்கு முன்பாகவே இந்திய அணியின் பயிற்சியாளரான ரவிசாஸ்திரி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான வெற்றியாளரை தீர்மானிக்க ஒரு டெஸ்ட் போட்டியை நடத்துவது சரியல்ல என்றும் மூன்று போட்டிகள் கொண்ட ஆட்டம் நடத்த வேண்டும் என்று கூறியிருந்தார்.

vaughan

இந்நிலையில் விராட் கோலியின் இந்த கருத்திற்கு பதிலடி கொடுத்துள்ள இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கல் வாகன் கோலியின் கருத்தை முற்றிலுமாக ஏற்க மறுத்தார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

இறுதிப் போட்டி என்றாலே ஒரு ஆட்டம் தான். அந்த ஒரு ஆட்டத்தில் எந்த அணி திறமையாக விளையாடுகிறதோ அந்த அணிதான் வெற்றியாளர், அதுதான் நடைமுறை. அந்த ஒரு போட்டியில் அணி திறமையாக விளையாடினால் தான் அவர்கள் சிறந்த வீரர்கள் என்பதையும் வெளிக்காட்டும் என்று கூறியுள்ளார்.

Advertisement