உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் வெல்லப்போவது யார் ? – மைக்கல் வாகன் கணிப்பு

Vaughan

கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்க்கும் ஒரு போட்டியாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி ஜூன் மாதம் 18 ஆம் தேதி சவுதாம்ப்டன் நகரில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் சாம்பியன் பட்டத்திற்காக விளையாட உள்ளன. ஐசிசி தரவரிசையில் முதல் இரு இடத்தில் இருக்கும் இவ்விரு அணிகளும் மோதுவதால் இந்த போட்டி நிச்சயம் விறுவிறுப்பாக அமையும் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை.

INDvsNZ

இந்நிலையில் இந்த போட்டியில் வெற்றி பெற்று யார் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றுவார்கள் ? என்பது குறித்த கேள்வி தற்போது சமூக வலைதளத்தில் எழுந்து வருகிறது. இந்நிலையில் இந்த கேள்விக்கு பதிலளித்துள்ள இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான மைக்கேல் வாகன் கூறுகையில் : என்னை பொருத்தவரை வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி இந்த பட்டத்தை தட்டிச் செல்வார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

- Advertisement -

ஏனெனில் இந்த இங்கிலாந்து மைதானங்கள் நியூசிலாந்து வீரர்களுக்கு சாதகமாக அமைய வாய்ப்பிருக்கிறது. மேலும் இந்த போட்டிக்கு முன்னர் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணியுடன் நியூசிலாந்து அணியுடன் மோத இருப்பதால் அவர்களுக்கு இது பயிற்சி போட்டி போன்று அமைய வாய்ப்புள்ளது.

nz

அதே வேளையில் இந்திய அணியோ 24 நாட்கள் தொடர் குவாரண்டின் காலத்தில் இருப்பதால் அவர்கள் மீண்டும் பயிற்சி செய்து இந்த ஆட்டத்தில் வலுவாக திரும்புவது கடினம். அதேபோன்று நியூஸிலாந்து வீரர்களுக்கு இங்கிலாந்து மைதானத்தின் தன்மை, டியூக் பந்து மற்றும் போட்டி சூழல் என அனைத்தும் அவர்களுக்கு சாதகமாக உள்ளது. எனவே என்னைப் பொறுத்தவரை நியூசிலாந்து அணி சரியான பிரிபரேஷன் உடன் இந்த போட்டியை அனுகும்.

- Advertisement -

Williamson-1

அதனால் நியூசிலாந்து அணி வெற்றிபெற அதிக வாய்ப்பு உள்ளதாக தான் நினைப்பதாக கூறியுள்ளார். அதேவேளையில் கடந்த பல தொடர்களாக டெஸ்ட் கிரிக்கெட்டில் தங்களது ஆதிக்கத்தை செலுத்தி வரும் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி கடுமையான போராட்டத்தை அளிக்கும் என்பதில் சந்தகமில்லை.

Advertisement