இந்திய அணியின் பெஸ்ட் கேப்டன் தோனியா ? கோலியா ? – மைக்கல் வாகன் எப்படி பதில் சொல்லிருக்காரு பாருங்க

Vaughan

இந்திய அணியின் மிகச்சிறந்த இரண்டு கேப்டன்களாக பார்க்கப்படுவது விராட் கோலி மற்றும் தோனி என்பது நாம் அறிந்ததே. கங்குலி கேப்டன் பொறுப்பிலிருந்து விலகிய போது இளம் வீரராக இருந்து தோனி இந்திய அணியை கையிலெடுத்து 2007 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை, 2011 ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பையும், 2013ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி கோப்பை என ஐசிசி நடத்திய அனைத்து வகையான கோப்பையையும் இந்திய அணிக்கு பெற்றுத்தந்தார். அதுமட்டுமின்றி பல ஆண்டுகள் இந்திய அணிக்காக வெற்றிகரமாக செயல்பட்ட கேப்டன் தோனி இந்திய அணியை அடுத்த லெவலுக்கு கொண்டு சென்றார் என்று கூறலாம்.

Dhoni

ஏனெனில் தோனியின் தலைமையில் ஏகப்பட்ட இளம் வீரர்கள் அணியில் அறிமுகமாகி இன்று உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருகின்றனர். அதேபோல் தோனி விட்ட இடத்தை விராட் கோலி சரியாக கைப்பற்றி சிறப்பாக இந்திய அணியை வழிநடத்தி வருகிறார். ஐசிசி நடத்திய கோப்பைகளை விராட் கோலி தலைமையில் இந்திய அணி கைப்பற்றவில்லை தவிர மற்றபடி சிறப்பாகவே செயல்பட்டு வருகிறது.

- Advertisement -

குறிப்பாக 60 டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு கேப்டனாக இருந்த கோலி 36 வெற்றிகளை பெற்று தந்துள்ளார். அதுமட்டுமின்றி ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றி சாதனை படைக்க டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியை புகழின் உச்சத்திற்கு அழைத்துச் சென்றார். இந்நிலையில் டோனி மற்றும் கோலி ஆகிய இருவரில் யார் சிறந்த கேப்டன் என்பது குறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் தனது கருத்தினை அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

dhoni

தோனி மிகச் சிறந்த கேப்டன். இந்தியா இன்று ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தி வர தோனி தான் முக்கிய காரணம். இளம் வீரர்களை கண்டெடுத்து இந்திய அணியை உருவாக்குவதில் மிகப்பெரிய பங்காற்றிய தோனி இன்று இந்திய அணி வலிமையாக இருக்க காரணமாக திகழ்கிறார். எனவே தோனி சிறந்த கேப்டன் என்று தெரிவித்திருந்தார். மேலும் விராட் கோலி குறித்து அவர் கூறுகையில் : விராட் கோலியை சிறந்த டெஸ்ட் கேப்டன் எனக் கூறலாம் ஏனெனில் டெஸ்ட் கிரிக்கெட் அணியை அவர் சிறப்பாக வழிநடத்தி வருகிறார்.

- Advertisement -

Dhoni

அதனால் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளை எடுத்துக்கொண்டால் தோனியியும், டெஸ்ட் போட்டிகள் என்று வந்தால் விராட் கோலி சிறந்த கேப்டன் என்றும் ஒட்டுமொத்தமாக சிறந்த கேப்டன் யார் என்று கேட்டால் தோனி தான் என்றும் சாமர்த்தியமான பதில் அளித்துள்ளார். அவர் கூறியதுபோலவே விராட் கோலி தலைமையிலான இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் கடந்த பல ஆண்டுகளாகவே ஆதிக்கம் செலுத்தி வருவது மட்டுமின்றி தற்போது நடைபெற உள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement