சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி மூலம் நடத்தப்படும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரானது தற்போது பாகிஸ்தான் மற்றும் துபாய் நாடுகளில் ஹைபிரிட் முறையில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் லீக் போட்டிகளில் விளையாடிய 8 அணிகளில் குரூப் ஏ பிரிவிலிருந்து இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளும், குரூப் பி பிரிவிலிருந்து தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளும் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறின.
அஷ்வின் சொன்னதை செய்து காட்டிய வருண் சக்ரவர்த்தி :
இந்நிலையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதலாவது அரையிறுதி போட்டியானது இன்று மார்ச் 4-ம் தேதி துபாயில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து தற்போது ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.
இந்த போட்டியின் மூன்றாவது ஓவரில் அந்த அணியின் துவக்க ஆட்டக்காரரான கூப்பர் கோனொலியை முகமது ஷமி டக் அவுட்டாக்கினார். அதனை தொடர்ந்து இந்திய அணிக்கு அச்சுறுத்தலாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட டிராவிஸ் ஹெட்டை அஸ்வின் கூறியது போன்றே வருண் சக்கரவர்த்தி தனது முதல் ஓவரிலேயே வெளியேற்றி அசத்தினார்.
அந்த வகையில் இந்த போட்டியின் போது ஒன்பதாவது ஓவரை வீசிய வருண் சக்கரவர்த்தி டிராவிஸ் ஹெட்டை தான் வீசிய 2 ஆவது பந்திலேயே 39 ரன்களில் வீழ்த்தி அசத்தினார். ஹெட்டின் விக்கெட்டை வீழ்த்திய அவருக்கு மைதானத்தில் இருந்து ரசிகர்கள் பெரிய வரவேற்பை அளித்திருந்தனர். ஏற்கனவே இந்த போட்டிக்கு முன்னதாக அஸ்வின் கூறுகையில் :
ஆஸ்திரேலிய அணி அரையிறுதியில் வெற்றிபெற வேண்டுமெனில் டிராவிஸ் ஹெட்டை விரைவில் ஆட்டமிழக்க வைக்க வேண்டும் என்றும் டிராவிஸ் ஹெட் அதிரடியாக ஆடுவார் என்பதனால் வருண் சக்கரவர்த்தியிடம் பந்து கொடுத்தால் அவரை வீழ்த்தி விடுவார் என்று அஸ்வின் தெரிவித்திருந்தார். அப்படி அஷ்வின் கூறியது போன்றே வருண் இரண்டாவது பந்தியிலேயே வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : இந்தியாவின் தொல்லை நாயகன் ஹெட்டை தூக்கிய தமிழன் வருண்.. உலகின் எந்த ஸ்பின்னரும் செய்யாத சாதனை
நியூசிலாந்து அணிக்கெதிரான கடைசி லீக் ஆட்டத்தில் அசத்தலான பந்துவீச்சை வெளிப்படுத்தி 5 விக்கெட்டுகளை வீழ்த்திய வருண் சக்ரவர்த்தி அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டியில் அசத்துவார் என்று முன்னாள் வீரர்கள் பலரும் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.



