இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நேற்று முன்தினம் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 44 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி அசத்தியிருந்தது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 249 ரன்கள் மட்டுமே குவித்ததால் 250 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு நியூசிலாந்து அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது.
வருண் சக்கரவர்த்திக்கு அடித்த ஜாக்ஃபாட் :
இந்த இலக்கினை இந்திய அணி வெற்றிகரமாக தடுத்து நிறுத்துமா? என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் வருண் சக்கரவர்த்தியின் மிகச் சிறப்பான பந்துவீச்சு காரணமாக நியூசிலாந்து அணி 205 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் காரணமாக இந்திய அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியின் போது மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய வருண் சக்கரவர்த்தி ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இப்படி நியூசிலாந்து அணிக்கு எதிராக ஐந்து விக்கெட்டுகளை அவர் வீழ்த்தியதால் அடுத்தடுத்து வரும் போட்டிகளிலும் அவர் விளையாட வேண்டும் என்ற கோரிக்கை பலரது மத்தியிலும் இருந்து வந்தது.
ஆனாலும் பிளேயிங் லெவனில் நான்கு சுழற்பந்து வீச்சாளர்கள் இருப்பதால் இந்த முடிவினை இந்திய அணி தொடர்ந்து எடுக்குமா? என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான அரையிறுதி போட்டி இன்று துபாய் மைதானத்தில் சற்று முன்னர் துவங்கிய வேளையில் இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன் பின்னர் பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா இந்திய அணியின் பிளெயிங் லெவனில் எந்த ஒரு மாற்றமும் இல்லை என்றும் கடந்த போட்டியில் விளையாடிய அதே அணிதான் இந்த போட்டியிலும் விளையாடும் என்று அறிவித்தார்.
இதையும் படிங்க : செமி ஃபைனல்: இது தெரியதாப்போ டாஸ் தோற்றதே நல்லது.. நாங்க அந்த 2க்கும் தயார்.. ரோஹித் பேட்டி
இதன் காரணமாக அரையிறுதி போட்டியிலும் தமிழக வீரரான வருண் சக்கரவர்த்தி விளையாடுவது உறுதியாகியுள்ளது. கடந்த போட்டியில் 5 விக்கெட் வீழ்த்திய அவரது சிறப்பான பந்துவீச்சுக்கு கை மேல் அடித்த லக்காக இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.



