நான் ஆரம்பத்தில் பவுலரே கிடையாது. என்னோட கிரிக்கெட் ஆரம்பிச்சது இப்படித்தான் – வருண் சக்ரவர்த்தி

Varun-1
- Advertisement -

தமிழக சுழற்பந்து வீச்சாளரான வருண் சக்கரவர்த்தி கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின்போது தனது சிறப்பான பந்து வீச்சின் மூலமாக உலகின் பல முன்னணி வீரர்களை அசால்டாக வீழ்த்தினார். இதன் காரணமாக அவர் ஆஸ்திரேலியா சென்ற இந்திய அணியின் டி20 தொடருக்கான அணியில் இடம் பிடித்தார். ஆனால் காயம் காரணமாக அந்த ஆஸ்திரேலியா தொடரை தவறவிட்ட வருண் சக்ரவர்த்திக்கு இரண்டாவது வாய்ப்பாக இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்தியாவில் நடைபெற்ற டி20 தொடரில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது.

- Advertisement -

ஆனால் அப்போதும் யோ-யோ டெஸ்டில் தேர்ச்சி பெறாமல் அணியிலிருந்து நீக்கப்பட்டார். இப்படி தனக்கு கிடைத்த இரண்டு வாய்ப்புகளையும் தவறவிட்ட வருண் சக்கரவர்த்திக்கு மூன்றாவதாக இலங்கை சுற்றுப்பயணத்தில் வாய்ப்பு கிடைத்தது. வருண் சக்ரவர்த்தி ஒரு சிறப்பான திறன் கொண்ட பந்துவீச்சாளர் என்ற காரணத்தினால் இந்திய நிர்வாகம் அவருக்கு இந்த வாய்ப்பை வழங்கியது.

இந்த இலங்கை தொடரில் ஒருநாள் போட்டிகளில் களமிறங்கவில்லை என்றாலும் டி20 தொடரில் தனது அசத்தலான பந்துவீச்சை வெளிப்படுத்திய அவர் பேட்ஸ்மேன்களை ரன் குவிக்க விடாமல் சிக்கனமாக பந்துவீசி விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். இலங்கை தொடரில் சிறப்பாக செயல்பட்ட அவர் ஐபிஎல் தொடரில் மேலும் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் நிச்சயம் டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தேர்வாவார் என்று கூறப்படுகிறது.

Varun

இந்நிலையில் தற்போது இலங்கை தொடர் முடிந்த பிறகு சர்வதேச போட்டிகளில் இந்திய அணிக்காக அறிமுகமானது பற்றி பேசிய வருண் சக்ரவர்த்தி கூறுகையில் : போட்டி ஆரம்பிப்பதற்கு முந்தைய நாள் நான் தூங்கவே இல்லை. இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்பதே என்னுடைய மிகப்பெரிய கனவு. அந்த கனவு நிறைவேறியதில் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன். முதல் டி20 போட்டியில் நான் விளையாடுவதற்கு முன்பு தினேஷ் கார்த்திக் இடம் சில ஆலோசனைகளை பெற்று அவர் கொடுத்த ஆலோசனைகளின் படி பந்துவீசினேன்.

varun

அவர் கொடுத்த ஆலோசனைகள் என்னை சிறப்பாக செயல்பட வைத்தது என்று வருண் சக்ரவர்த்தி கூறினார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : நான் எனது கிரிக்கெட் கெரியரை துவங்கும்போது பவுலராக ஆரம்பிக்கவில்லை. விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேனாகத்தான் துவங்கினேன். பிறகு எனக்கு ஏற்பட்ட சில காயம் காரணமாக நான் ஸ்பின் பவுலராக மாறினேன் என வருண் சக்கரவர்த்தி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement