சொன்னபடியே வாய்ப்பு கொடுத்த ராகுல் டிராவிட். தமிழக ரசிகர்கள் ஹேப்பி – அப்படி என்ன விஷயம் தெரியுமா ?

Dravid
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஆனது சமீபத்தில் முடிவடைந்தது. இந்த தொடரில் இந்திய அணி 2க்கு 1 என்ற கணக்கில் வெற்றி பெற்ற நிலையில் தற்போது இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் இன்று முதல் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணியில் எந்தெந்த வீரர்கள் விளையாடுவார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் தற்போது முதலாவது டி20 போட்டி தொடங்கியுள்ளது.

ind

- Advertisement -

டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. அதன்படி தற்போது இந்திய அணி முதலில் விளையாட தயாராகியுள்ளது. துவக்க வீரர்களாக தவான் மற்றும் ப்ரித்வி ஷா ஆகியோரும், மிடில் ஆர்டரில் இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோரும் விளையாடுகின்றனர்.

ஆல்-ரவுண்டராக ஹர்டிக் பண்டியா மற்றும் க்ருனால் பாண்டியா ஆகியோரும் விளையாடுகின்றனர். மேலும் பந்துவீச்சாளராக தீபக் சாஹர் மற்றும் புவனேஸ்வர் குமார் ஆகியோர் வேகப்பந்து வீச்சாளர் பந்து வீச்சாளர்களாகவும், சாஹல் மற்றும் தமிழக வீரரான வருண் சக்கரவர்த்தி ஆகியோர் விளையாடுகின்றனர்.

varun 1

இதில் ஏற்கனவே ராகுல் டிராவிட் கூறியதுபோல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கும் வகையில் தமிழக வீரரான வருண் சக்கரவர்த்திக்கு இன்று அறிமுகம் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஐபிஎல் தொடரில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய வருண் சக்கரவர்த்தி இன்றைய போட்டியில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப் படுவது குறிப்பிடத் தக்கது.

- Advertisement -

இன்றைய பிளேயிங் லெவன் இதோ :

1) ஷிகார் தவான், 2) ப்ரித்வி ஷா, 3) இஷான் கிஷன், 4) சூரியகுமார் யாதவ், 5) சஞ்சு சாம்சன், 6) ஹர்டிக் பாண்டியா, 7) க்ருனால் பாண்டியா, 8) புவனேஷ்வர் குமார், 9) தீபக் சாகர், 10) சாஹல், 11) வருண் சக்ரவர்த்தி

Advertisement