நேத்து தான் சொன்னாங்க.. அந்த 4 சீனியர்கள் ஹெல்ப் பண்ணாங்க.. நியூஸிலாந்தை சாய்த்த ஆட்டநாயகன் வருண்

Varun Chakravarthy
- Advertisement -

ஐசிசி 2025 சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் மார்ச் இரண்டாம் தேதி நடைபெற்ற கடைசி லீக் போட்டியில் நியூசிலாந்தை 44 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது. துபாயில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 50 ஓவரில் 249-9 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் ஐயர் 79, அக்சர் படேல் 42, ஹர்டிக் பாண்டியா 45 ரன்கள் எடுத்தார்கள்.

நியூசிலாந்துக்கு அதிகபட்சமாக மாட் ஹென்றி 5 விக்கெட் எடுத்தார். அடுத்ததாக விளையாடிய நியூசிலாந்து கடுமையாக முயற்சித்தும் இந்தியாவின் தரமான பந்து வீச்சில் 45.3 ஓவரில் 205 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. அதிகபட்சமாக கேன் வில்லியம்சன் 81 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

- Advertisement -

வருண் அசத்தல்:

அதனால் விளையாடிய 3 போட்டிகளிலும் 3 வெற்றியைப் பெற்ற இந்தியா குரூப் பி பிரிவின் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்தது. அதன் காரணமாக மார்ச் 4ஆம் தேதி நடைபெறும் முதல் செமி ஃபைனலில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ள இந்தியா தகுதிப் பெற்றது. இந்த வெற்றிக்கு 5 விக்கெட்டுகள் எடுத்து முக்கிய பங்காற்றிய வருண் சக்கரவர்த்தி ஆட்டநாயகன் விருதை வென்றுள்ளார்.

இந்நிலையில் ஒருநாள் கிரிக்கெட்டில் பெரியளவில் விளையாடாத கேப்டன் ரோஹித் போன்ற சீனியர்களிடம் உதவி செய்ததாக வருண் கூறியுள்ளார். மேலும் இந்தப் போட்டியில் விளையாட போகிறோம் என்பது நேற்று இரவு தான் தெரிந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். துபாய் பிட்ச் சுழலுக்கு அதிகமாக சாதகமாக இல்லை என்றாலும் நல்ல உதவி செய்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

- Advertisement -

ஆட்டநாயகன் வருண்:

இது பற்றி வருண் பேசியது பின்வருமாறு. “முதலில் நான் ஆரம்பக்கட்ட நேரங்களில் மிகவும் பதற்றமாக இருந்தேன். ஏனெனில் இந்தியாவுக்காக ஒருநாள் போட்டிகளில் நான் அதிகமாக விளையாடியது இல்லை. ஆனால் நேரம் செல்ல செல்ல நான் நன்றாக உணர்ந்தேன். விராட், ரோஹித், ஸ்ரேயாஸ், ஹர்டிக் ஆகியோர் என்னிடம் பேசினார்கள். அது எனக்கு உதவி செய்தது”

இதையும் படிங்க: என்னையே கோபப்பட வெச்சுட்டாங்க? வம்பிழுத்த சாம் கோன்ஸ்டஸ்க்கு கொடுத்த பதிலடி என்ன? பும்ரா பேட்டி

“இந்தப் போட்டியில் விளையாடப் போகிறேன் என்பதை நேற்று இரவு தான் தெரிந்து கொண்டேன். நாட்டுக்காக விளையாடுவேன் என்பது எனக்குத் தெரியும். ஆனால் அது கொஞ்சம் பதற்றத்தையும் கொடுத்தது. பிட்ச் தாறுமாறாக சுழலுக்கு சாதகமாக இல்லை. அதே சமயம் நீங்கள் சரியான இடத்தில் பௌலிங் செய்தால் அது உங்களுக்கு நல்ல உதவியை செய்தது. குல்தீப், ஜடேஜா, அக்சர் ஆகியோருடன் எங்களுடைய வேகப்பந்து வீச்சாளர்களும் நன்றாக பௌலிங் செய்தார்கள். இந்த வெற்றி எங்களுடைய அணியின் முயற்சிக்கு கிடைத்தது” என்று கூறினார்.

Advertisement