- Advertisement -
இந்திய கிரிக்கெட்

பாகிஸ்தானால் இந்தியாவின் கோப்பையை தான் பறிக்க முடியும்.. அதை பறிக்க முடியாது.. வருண் பதிலடி

ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரில் சூரியகுமார் யாதவ் தலைமையில் இந்தியா 9வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. அத்தொடரில் பாகிஸ்தானை 3 முறை எதிர்கொண்ட இந்தியா 3 வெற்றிகளைப் பெற்று கோப்பையை வென்றது. குறிப்பாக இறுதிப் போட்டியில் 147 ரன்கள் சேசிங்கில் 20/3 என சரிந்த பின்பும் இந்தியா போராடி வென்றது ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது.

ஆனால் போராடி வென்ற ஆசியக் கோப்பையை பாகிஸ்தான் மற்றும் ஆசிய கவுன்சில் தலைவர் மோசின் நக்வி இந்திய அணிக்கு பரிசளிக்காமல் எடுத்துச் சென்றது சர்ச்சையானது. அதாவது பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் நிகழ்த்திய தாக்குதலில் 26 இந்தியர்கள் இயற்கை எய்தினார்கள். அதற்கு பதிலடியாக ஆசியக் கோப்பையில் பாகிஸ்தான் அணியுடன் இந்திய அணியினர் கைகுலுக்கவில்லை.

- Advertisement -

கோப்பையை தான் பறிக்க முடியும்:

அதே போல பாகிஸ்தான் உள்துறை அமைச்சராக இருக்கும் மோசின் கைகளால் கோப்பையை வாங்க முடியாது என்று இந்திய அணி தெரிவித்து விட்டது. அதனால் அவமானப்பட்ட அவர் இந்தியா எப்படி வெற்றியைக் கொண்டாடுகிறார்கள் என்பதைப் பார்ப்பதற்காக கையோடு கோப்பையை எடுத்துச் சென்றார். அதற்காக அசராத இந்திய அணி கையில் கோப்பை இருப்பது போல் கொண்டாடி அவருக்கு பதிலடி கொடுத்தது.

இந்நிலையில் இந்தியா வென்ற ஆசியக் கோப்பையை மட்டுமே பாகிஸ்தான் பறிக்க முடியும் என்று வருண் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார். ஆனால் 2025 ஆசியக் கோப்பை சாம்பியன் இந்தியா என்ற பட்டத்தை பாகிஸ்தானால் பறிக்க முடியாது என்று அவர் பதிலடி கொடுத்துள்ளார். இது பற்றி வருண் பேசியது பின்வருமாறு. “ஆசியக் கோப்பையில் நாங்கள் அனைத்து போட்டிகளையும் வெல்வோம் என்பது எங்களுக்குத் தெரியும்”

- Advertisement -

வருண் மறைமுக பதிலடி:

“ஏனெனில் நாங்கள் உலகின் நம்பர் ஒன் அணியாக இருக்கிறோம். அவர்கள் எங்களுடைய கோப்பையை பறித்திருக்கலாம். ஆனால் நாங்கள் தான் சாம்பியன்” என்று கூறினார். அத்துடன் ஆசியக் கோப்பையின் முடிவில் தம்முடைய அருகில் தேநீர் கோப்பையை வைத்து வெளியிட்ட புகைப்படம் பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “நாங்கள் வெற்றி பெறுவோம் என்பதால் அனைத்தையும் திட்டமிட்டு வைத்திருந்தேன்”

இதையும் படிங்க: ஆஸ்திரேலிய அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான் – லிஸ்ட் இதோ

“குறிப்பாக கோப்பையுடன் தூங்குவது போன்ற புகைப்படத்தை எடுக்கலாம் என்று நினைத்தேன். ஆனால் போட்டி முடிந்ததும் எங்களுக்கு கோப்பை கிடைக்கவில்லை. என்னுடைய அருகில் தேநீர் கோப்பை மட்டுமே இருந்தது. எனவே அதனுடன் புகைப்படம் எடுத்தேன். நாட்டுக்காக விளையாடும் நாங்கள் புகைப்படத்துக்காக விளையாடவில்லை. நாங்கள் கையில் கோப்பையை வைத்திருக்கிறோமா இல்லையா என்பது முக்கியமில்லை. இந்த உலகத்திற்கு யார் உண்மையான சாம்பியன் என்பது தெரியும்” என்று கூறினார்.

- Advertisement -