33 வயதில் திறமையால் போராடி சாதித்த தமிழக வீரர் வருண்.. 51 வருடங்கள் கழித்து ஸ்பெஷல் சாதனை

Varun Chakravarthy 2
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி தங்களுடைய சொந்த ஊரில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இங்கிலாந்துக்கு எதிராக விளையாடி வருகிறது. அந்தத் தொடரின் முதல் போட்டியில் வெற்றி பெற்ற இந்தியா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. அதைத் தொடர்ந்து இரண்டாவது போட்டி பிப்ரவரி ஒன்பதாம் தேதி ஒடிசா மாநிலம் கட்டாக் நகரில் மதியம் 1.30 மணிக்கு துவங்கியது.

அந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இந்திய அணியில் விராட் கோலி மீண்டும் தேர்வான நிலையில் தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி அறிமுகமாக களம் இறங்கும் வாய்ப்பைப் பெற்றார். 2021ஆம் ஆண்டு டி20 கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாததால் 6 போட்டியுடன் கழற்றி விடப்பட்டார்.

- Advertisement -

33 வயதில் அறிமுகம்:

இருப்பினும் மனம் தளராத அவர் ஐபிஎல் தொடரில் கடந்த வருடம் கொல்கத்தா கோப்பையை வெல்ல உதவினார். அதனால் பயிற்சியாளராக கௌதம் கம்பீர் வந்ததும் இந்திய டி20 அணிக்குள் வருண் சக்கரவர்த்தியை மீண்டும் கொண்டு வந்தார். அந்த வாய்ப்பில் கடந்த வங்கதேசம், தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து தொடர்களில் அபாரமாக பவுலிங் செய்த வருண் இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றினார்.

இதற்கிடையே 2025 விஜய் ஹசாரே உள்ளூர் ஒருநாள் தொடரில் தமிழ்நாடு அணிக்காக 18 விக்கெட்டுகள் எடுத்த அவர் உச்சகட்ட ஃபார்மில் இருக்கிறார். அப்படிப்பட்ட அவரை அடுத்து நடைபெறும் 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி தேர்ந்தெடுக்கவில்லை. அதனால் கடைசி நேரத்தில் தவறை உணர்ந்த இந்திய அணி இந்தத் தொடரில் அவரை தேர்வு செய்தது.

- Advertisement -

51 வருடங்கள் கழித்து:

அதில் முதல் போட்டியில் வாய்ப்பு பெறாத வருண் சக்கரவர்த்திக்கு இரண்டாவது போட்டியில் பிளேயிங் லெவனில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இந்திய வீரர்களின் கைதட்டல்களுக்கு மத்தியில் தம்முடைய கனவு ஒருநாள் அணியின் தொப்பியை ரவீந்திர ஜடேஜா கைகளால் வருண் பெற்றுக் கொண்டார். இதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் 2வது அதிக வயதில் (33 வருடம் 164 நாட்கள்) அறிமுகமான இந்திய வீரர் என்ற ஸ்பெஷல் சாதனையையும் அவர் படைத்துள்ளார்.

இதையும் படிங்க: தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி ஒருநாள் போட்டிகளில் அறிமுகமாக என்ன காரணம்? – விவரம் இதோ

இதற்கு முன் 1974ஆம் ஆண்டு 36 வருடம் 138 நாட்கள் வயதில் இங்கிலாந்துக்கு எதிராக லீட்ஸ் மைதானத்தில் இந்தியாவுக்காக ஃபரூக் என்ஜினீயர் அறிமுகமாகி முதலிடத்தில் இருக்கிறார். அவருக்குப் பின் 51 வருடங்கள் கழித்து 2வது அதிக வயதில் வருண் அறிமுகமாகியுள்ளார். இந்த வாய்ப்பில் அசத்தும் பட்சத்தில் சாம்பியன்ஸ் டிராபி இந்திய அணியிலும் அவருக்கு வாய்ப்பு காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement